இணையத்தில் உலாவரும் பூஜை பட பாடல்கள்… அதிர்ச்சியில் விஷால்
தமிழ் சினிமா உலகில் ஆடியோ வெளியிடுவதற்கு முன்பே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாவது இன்றைக்கு அன்றாட நிகழ்வாகிவிட்டது.
பிரியாணி, வாலு, கத்தி என பல படங்களின் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விஷால் - ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை படத்தின் பாடல்களின் தலைப்புகள் தற்போது உலாவருகின்றன.
ஆடியோ வெளியாகும் முன்பே அனைத்து பாடல்களின் தலைப்புகளும் லீக் ஆனது எப்படி என்று குழம்பியுள்ளது பூஜை பட டீம்.

ஹரியின் பூஜை
விஷால்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘பூஜை' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

யுவனின் இசையில்
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் பாடல் வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வி மியூசிக்
இப்படத்தின் பாடல்களை நடிகர் விஷால் தனது சொந்த நிறுவனமான வி மியூசிக் மூலம் முதன்முதலாக வெளியிடவிருக்கிறார்

இணையத்தில் பாடல்கள்
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் தலைப்பு திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

6 பாடல்கள்
அதன்படி, ‘ஓடி ஓடி' என்று தொடங்கும் பாடலை பாலக்காடு ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘இப்படியே' என்று தொடங்கும் பாடலை ராகுல் நம்பியாரும், மிலி நாயரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ‘வேறாரும்' என்ற பாடலை கார்த்திக், பூஜா ஆகியோரும் பாடியுள்ளனர்.

உயிரே.. உயிரே…
‘உயிரே' என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவும், ‘சோடா பாட்டில்' என்று தொடங்கும் பாடலை யாஷின், அந்தோணி தாசன், சத்யன் ஆகியோரும், ‘தேவதை' என்று தொடங்கும் பாடலை நிவஸ் ஆகியோரும் பாடியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் விஷால்
இன்னும் பாடல்கள் வெளியிடப்படாத சூழ்நிலையில் பாடல்களின் தலைப்பு திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிஜமாகவே இதை யார் வெளியிட்டிருப்பார்கள் என்று ஆராய்சியில் இறங்கியுள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











