அந்த பதிவுக்கு பின்னால இப்படியொரு கதையா? சமந்தாவை கிண்டலடித்த ஹீரோயின்.. விளாசித் தள்ளிய ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை சமந்தாவை பிரபல நடிகை கிண்டலடித்தாகக் கூறி, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக, அலா வைகுந்தபுரம்லோ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

டைட்டில் வைக்கவில்லை

டைட்டில் வைக்கவில்லை

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அங்கு டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து வருகிறார். பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படத்திலும் அவர் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் கதை 1950 களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. படம். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

சல்மான்கான் ஜோடி

சல்மான்கான் ஜோடி

தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது இந்தப் படம். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் ஹேக்

இன்ஸ்டாகிராம் ஹேக்

இந்த நேரத்தில் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு, வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். இந்நிலையில். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார், பூஜா ஹெக்டே.

டிஜிட்டல் டீம்

டிஜிட்டல் டீம்

இதுபற்றி தனது ட்விட்டரில், 'எனது இன்ஸ்டாகிராம் கணக்கை சிலர் முடக்கியுள்ளனர். எனது டிஜிட்டல் டீம் அதை மீட்க உதவி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இது காலையில். பிற்பகலில் நிலைமை தலைகீழாகி விட்டது.

மன்னிப்புக் கேட்கணும்

மன்னிப்புக் கேட்கணும்

அதாவது நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாவில் நடிகை சமந்தா போட்டோவை பதிவிட்டு, 'அப்படியொன்னும் அழகு இல்லையே?' என்று கிண்டலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை காப்பி செய்து பதிவு செய்த ரசிகர்கள், இதை செய்தது பூஜா ஹெக்டேதான். இதற்காகத்தான் போலியாக தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினர்.

சமந்தாவின் சிறப்புகள்

சமந்தாவின் சிறப்புகள்

பின்னர் #PoojaMustApologizeSamantha மற்றும் #PoojaMustApologizeSamFans ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கினர். இதன் கீழே, சமந்தா நடித்த படங்கள், அவரது சிறப்புகளை பட்டியலிட்டுள்ளனர் ரசிகர்கள். இதற்கிடையே நடிகை புஜா ஹெக்டே, எனது டெக்னிக்கல் டீம் இன்ஸ்டாவை மீட்டுவிட்டது. நன்றி. இதற்கிடைப்பட்ட நேரத்தில் வந்தப் பதிவுகளை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.

ரணகள ரசிகர்கள்

ரணகள ரசிகர்கள்

ஆனால், இதை ஏற்காத ரசிகர்கள் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே, இங்கே ரசிகர்கள் இந்த ரணகளத்தில் இருக்க, நடிகை சமந்தா கூலாக சிரித்தபடி, வெற்றி சின்னத்தைக் காட்டியவாறு இருக்கும் தனது புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவும் அந்த ஹேஷ்டாக்கும் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X