கொரோனா பயமே இல்லையே.. மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றிய இன்னொரு நடிகைக்கும் அபராதம்!
கொச்சி: முகக் கவசம் அணியாமல் வெளியில் சென்ற நடிகைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடுமையாக மிரட்டி வருகிறது.
மனித குலத்துக்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாக இந்த வைரஸ் உருவெடுத்து உள்ளது..

12 லட்சம் பலி
இந்த தொற்றுக் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக, மிரட்டி வரும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

கைகளை கழுவுதல்
இந்த தடுப்பு மருந்து இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முகக் கவசம், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் போன்ற தனிமனித கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

இது வராது
இந்நிலையில், பொதுமக்களில் பலர் இதை முறையாகப் பின்பற்றுவதில்லை. நமக்கெல்லாம் இது வராது என்ற மன நிலையிலேயே அலைந்து வருகின்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கிராமப்புறங்களில் பலர் இதைப் பின்பற்றுவதில்லை. இந்நிலையில், சினிமா பிரபலங்களும் முக கவசம் அணியாமல் சென்று வருகின்றனர்.

நடிகை அதிதி பாலன்
கடந்த சில நாட்களுக்கு முன், கொடைக்கானலில் முகக் கவசம் இல்லாமல் காரில் சென்ற அருவி பட நடிகை அதிதி பாலனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு நடிகை ஒருவரும் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக, சுகாதாரத் துறையினரிடம் அபராதம் கட்டியுள்ளார்.

ஸ்வர்ண கடுவா
அவர், நடிகை பூஜிதா மேனன். மலையாளத்தில் மரம்கொத்தி, நீயும் நானும், ஸ்வர்ண கடுவா, சில்ரன்ஸ் பார்க் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மாஸ்க் அணியாமல் சென்றதால், தான் அபராதம் கட்டியதாக, பூஜிதா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சமாளித்து விடலாம்
இது தொடர்பாக அவர், மாஸ்க் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். சென்றால் அபராதம் விதிக்கப்படும். நானும் ரூ.200 அபராதம் கட்டினேன். பேசி சமாளித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், கண்டிப்பாக அபராதம் வாங்கிவிட்டனர். மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications