Pookie X Review: Gen Z கிட்ஸ்களின் காதல் + பிரேக்கப் கலாட்டா.. பூக்கி ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, எடிட்டிங் செய்து அவரது மருமகன் மார்கன் படத்தில் அறிமுகமானாரே அஜய் தீஷன் அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் தான் 'பூக்கி'. இன்று திரையரங்குகளில் அந்த படம் வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான அபிஷன் ஜீவிந்தின் 'வித் லவ்' திரைப்படம் பழைய காதல் நினைவுகளை கிளறி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வாரம் சசிகுமாரின் 'மை லார்ட்', அஜய் தீஷனின் 'பூக்கி' மற்றும் சிறு பட்ஜெட் படங்களான மைலாஞ்சி, கப்புள் ஃபிரெண்ட்லி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

Pookie X Review in Tamil Ajay Dhishan and Dhanusha s breakup and patchup story is a fun ride
Photo Credit:

விஜய் ஆண்டனியின் சலீம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள பூக்கி படத்தில் அஜய் தீஷன், அறிமுக நடிகை தனுஷா, பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பூக்கி திரைப்படம் இளைஞர்களை டார்கெட் செய்து இன்று வெளியாகி இருக்கிறது.

இன்றைய யூத்களின் கதை: பூக்கி படத்தை பார்த்த ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்றைய யூத்களில் காதல் மற்றும் பிரேக்கப் கதை தான் இந்த பூக்கி என்றும் படத்துக்கு 3.25 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து விமர்சித்துள்ளார். அஜய் தீஷன், தனுஷா ரெண்டு பேருமே கொடுத்த வேலையை சிறப்பாக ஜாலியாக செய்து ரசிகர்களை கட்டிப் போடுகின்றனர் என பாராட்டியுள்ளார்.

விஜய் ஆண்டனி மியூசிக் செம ஃபன்: விஜய் ஆண்டனி மீண்டும் தனது பழைய துள்ளலான ஸ்டைலில் மியூசிக் போட ஆரம்பித்துள்ளார். இந்த படத்தில் வரும் ஜெகன் மோகினி பேய் பாடல் முதல் அனைத்து பாடல்களும் இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதாக இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இவரும் படத்துக்கு 3.25 ரேட்டிங்கையே கொடுத்துள்ளார்.

சிம்பு ரெஃபரன்ஸ்: பூக்கி படத்தில் ஏகப்பட்ட இடங்களில் சிம்புவின் பழைய இண்டர்வியூ பேட்டி வீடியோக்களை ரெஃபரன்ஸாக வைத்து படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக சிம்பு ரசிகர்களுக்கு இந்த காதலர் தினத்துக்கு செம ட்ரீட் தான் என சுகுமார் ஸ்ரீனிவாஸ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இளைஞர்களுக்கான படமாக காதலர் தினத்தை குறிவைத்து Kiss Dayவில் வெளியாகி உள்ள பூக்கி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய விமர்சனங்களை கமெண்ட் பண்ணுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X