'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
சென்னை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள கிளாமர் ஸ்டில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஹரி இயக்கிய சேவல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், பூனம் பஜ்வா.
ஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டன.

தம்பிக்கோட்டை
சுதா கொங்கரா இயக்கிய முதல் படமான துரோகி, நரேன் நடித்த தம்பிக்கோட்டை படங்களிலும் இவர் கேரக்டர் கவனிக்கப்பட்டன. சுந்தர். சி. இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.

வாய்ப்புகள் இல்லை
ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் நடித்திருந்தார். விஷாலின் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தெலுங்கு, தமிழை அடுத்து, மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. குப்பத்து ராஜா படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வரவில்லை அவருக்கு.

விவரிக்க முடியாத
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலர், சுனில் ரெட்டியை இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார். இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார், பூனம். இந்தப் புகைப்படங்கள் வைரலாயின.
Recommended Video

ஏராள லைக்ஸ்
வழக்கமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிடாத பூனம் பஜ்வா, இப்போது அப்படி ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ள அந்த புகைப்படத்துக்கு நெட்டிசன்ஸ் சரமாரி கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர்.

தீவிர ரசிகன்
ஒரு நெட்டிசன், என்ன நீங்களும் இப்படி ஆகிட்டீங்க? என்று வருத்தமாகக் கேட்டுள்ளார். தமிழ்ல அடுத்து என்ன படம் நடிக்கிறீங்க? என்று சிலரும் உங்களை போல அழகியில்லை, உங்களின் தீவிர ரசிகன் நான் என்றும் பல நெட்டிசன்ஸ் வழிந்துள்ளனர். பலர் ஒரு ஹாய் சொல்லுங்களேன் என்று ஆசையாகக் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











