'பிக் பாஸ்ல நீங்க இல்லைன்னு தெரிஞ்சதும் ஏமாந்து போயிட்டோம்..' பிரபல நடிகையிடம் ரசிகர்கள் வருத்தம்!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் இல்லை என்று தெரிந்ததும் ஏமாந்துவிட்டேன் என்று நடிகை பூனம் பஜ்வாவிடம் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

poonam pandey released 'bedtime stories' promo

ஹரி இயக்கிய சேவல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா.

ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

முத்தின கத்திரிக்காய்

முத்தின கத்திரிக்காய்

சுதா கொங்கரா இயக்கிய முதன் படமான துரோகி, நரேன் நடித்த தம்பிக்கோட்டை படங்களிலும் இவர் கேரக்டர் கவனிக்கப்பட்டன. சுந்தர். சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் கிளாமராக நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டார். ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் நடித்திருந்தார்.

வாய்ப்புகள் வரவில்லை

வாய்ப்புகள் வரவில்லை

விஷாலின் ஆம்பள படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தெலுங்கு, தமிழை அடுத்து, மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. தமிழில் நடித்த குப்பத்து ராஜா படத்துக்குப் பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை அவருக்கு. இந்த கொரோனா காலத்தில் மும்பையில் இருக்கிறார்.

கிளாமர் ஸ்டில்கள்

கிளாமர் ஸ்டில்கள்

இவரும் மற்ற நடிகைகளை போல அவ்வப்போது கிளாமர் ஸ்டில்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்குவார்கள். சில நேரங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வார் பூனம் பஜ்வா. இந்நிலையில் அவர் இப்போது தனது புதிய ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்

மொட்டை மாடியில்

மொட்டை மாடியில்

கருப்பு நிற உடையில் தனது வீட்டு மொட்டை மாடியில் நின்று அவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன. இந்த போட்டோக்களை லட்சக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். ரெட், பிங்க், கருப்பு.. எல்லா வண்ணங்களும் உங்களுக்கானதாகவே இருக்கிறது என கூறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பூஜம் பஜ்வா. சில தெலுங்கு ரசிகர்கள், 'பிக் பாஸ் நிகழ்ச்சியில நீங்க இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்ப ஏமாந்து போயிட்டேன் என்று வருத்தமாகக் கூறி உள்ளனர். இன்னொருவர், 'ரொம்ப மாறிட்டீங்க பூனம், 18 வயது பொண்ணு மாதிரி இருக்கீங்க' என்று தெரிவித்துள்ளார்.

செமயா இருக்கீங்க

செமயா இருக்கீங்க

சில தமிழ் ரசிகர்கள், இது வேற லெவல் அழகு என்றும் அக்கா, நீங்க செமயா இருக்கீங்க.. எப்படி இப்படி மாறுனீங்க? என்றும் கேட்டுள்ளனர். சீக்கிரம் படங்கள்ல உங்களை எதிர்பார்க்கிறேன், நல்ல வாய்ப்பு அமையணும்னு பிரே பண்றேன் என்று கூறியுள்ளார் ஒரு பாசக்கார ரசிகர். பூனம் பஜ்வாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X