Poonam Bajwa: இப்படி படுத்துக்கிட்டு ஸ்ட்ரெச் பண்ணாதீங்க.. பூனம் பஜ்வாவிடம் கெஞ்சும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை பூனம் பஜ்வா சோம்பல் முறித்து போட்டோ போட்டாலே ரசிகர்கள் சொக்கிப் போய் விடுவார்கள். இந்நிலையில், இப்படி படுத்துக் கொண்டு ஸ்ட்ரெச் செய்யும் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார் என கமெண்ட்டுகள் குவிகின்றன.
மும்பையில் பிறந்து வளர்ந்த பூனம் பஜ்வா மொடட்டி சினிமா எனும் தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார்.

தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் அதிகளவில் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார் பூனம் பஜ்வா.
அடுத்த நயன்தாரா: ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் எப்படி நயன்தாரா தமிழில் நடித்து டாப் நடிகையாக மாறினாரோ அதே அளவுக்கு பூனம் பஜ்வாவும் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த பூனம் பஜ்வா அதன் பின்னர் நடித்த படங்கள் சரிவர ஓடாத நிலையில், அப்படியே அவர் மார்க்கெட் சரியத் தொடங்கியது.
ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயின் வாய்ப்பை இழந்து ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை, முத்தின கத்தரிக்காய் என நடிக்க ஆரம்பித்தார் பூனம் பஜ்வா.

இன்ஸ்டாகிராமில் ஹாட்னஸ்: ஆனால், இன்னமும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் பூனம் பஜ்வா. இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் போட்டோக்களுக்கும் வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கின்றனர்.
பிகினி உடைகளை அணிந்துக் கொண்டும் ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு இடையழகை இஷ்டத்துக்கு காட்டியும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா.

விவகாரமான ஸ்ட்ரெச்: பீச்சில் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு அனலை கூட்டி வந்த பூனம் பஜ்வா தற்போது கவர்ச்சி உடையில் குனிந்து கொண்டும், படுத்துக் கொண்டும் ஸ்ட்ரெச் செய்யும் வொர்க்கவுட் வீடியோவை வெளியிட்டு இளைஞர்களை இம்சை செய்து வருகிறார்.
இந்த யூனிவர்ஸிலேயே செக்ஸியான நடிகை நீங்க தான் என்றும் உங்க உடம்பை ஸ்ட்ரெச் செய்து எங்க மனங்களை ஸ்ட்ரெய்ன் பண்றீங்களே நியாயமா பூனம் பஜ்வா என ரசிகர்கள் புலம்பியபடி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications