டி சர்ட்டில் அந்த விரலை காட்டும் புகைப்படம்.. என்ன சிம்ரன் இதெல்லாம் என பூனமை ஓட்டும் ஃபேன்ஸ்!
சென்னை: ஹீரோயினாக அறிமுகமாகி கிளாமர் நடிகையாக மாறிவிட்ட பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை பூனம் பஜ்வா சமூக வலைதளத்தில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது டி சர்ட் அணிந்து குழந்தை போல காட்சியளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

கவர்ச்சிப் புயல்
கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் ஹீரோயினாக இருந்த பூனம் பஜ்வா அப்படியே கிளாமர் குயினாக மாறி விட்டார்.

குழந்தை போல
ஹாட் போட்டோஷூட் செய்து அதிர வைத்து வந்த நடிகை பூனம் பஜ்வா தற்போது குழந்தை போல உடையணிந்து க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

மொட்டை மாடியில்
பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால், கீர்த்தி சுரேஷ், அஞ்சனா ரங்கன் போல இவரும் இப்போ மொட்டை மாடியில் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். குழந்தைகள் அணிவது போல பெல்ட் வைத்த பேன்ட் உடையை மாட்டிக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

செம சிரிப்பு
யோகா செய்வது போல மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்களும், காற்றில் கூந்தல் பறக்க அதனை கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் சிரிப்பழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அருள் தரும் அம்மன்
இன்னொரு புகைப்படத்தில் யோகாவை விட்டு விட்டு அருள் தரும் அம்மன் போல போஸ் கொடுத்து சிரிக்கும் பூனம் பஜ்வாவின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். நடிகை காம்னா, ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் கமெண்ட் செய்துள்ளனர்.

நடுவிரலை காண்பித்து
குழந்தையை போல க்யூட்டாக இருக்கும் போட்டோஷூட்டில் பூனம் பஜ்வா அணிந்திருக்கும் வெள்ளை நிற டிசர்ட்டில் பிரின்ட் செய்யப்பட்டுள்ள பெண் ஓவியத்தில் நடுவிரலை காட்டியபடி இருக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பலரும் டி சர்ட்டை பார்த்தீங்களா என்றும் என்ன சிம்ரன் அந்த விரலை எல்லாம் காட்டுறீங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











