twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவாவை விட்டு போகக்கூடாது, ஆமா.. ஆபாசப்பட விவகாரம்.. பூனம் பாண்டேவுக்கு ஜாமீன்!

    By
    |

    கோவா: கோவா போலீசாரால் கைது செய்யப்பட்ட பூனம் பாண்டேவுக்கும் அவர் காதல் கணவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

    Recommended Video

    பொது இடத்தில் ஆபாச புகைப்படங்கள் எடுத்த Ponam Padey க்கு ஜாமீன்

    பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.

    சர்ச்சை நடிகையான இவர், அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார்.

    தேனிலவு கோவா

    தேனிலவு கோவா

    இவர் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனை பலர் கண்டித்தும் கண்டுகொள்வதில்லை இவர். இவரும் சாம் பாம்பேவை என்பவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர்.

    மீண்டும் சேர்ந்தனர்

    மீண்டும் சேர்ந்தனர்

    கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசில் புகார் அளித்தார் பூனம். பின்னர் இருவரும் சமரசமாகி மீண்டும் இணைந்தனர். இந் நிலையில் பூனம் பாண்டே தெற்கு கோவாவில் கனாகோனா (Canacona) பகுதியில் உள்ள அணையின் அருகில் நின்று ஆடைகளை களைந்து நிர்வாண போஸ் கொடுத்து வீடியோ எடுத்தார்.

    ஆபாச படம்

    ஆபாச படம்

    அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்த பூனம் பாண்டே மீதும் அவருக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    வியாழன் கைது

    வியாழன் கைது

    கோவா முன்னேற்ற கழக மகளிர் அணி மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனால் பூனம் பாண்டே கைதாகலாம் என பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரும் அவர் கணவர் சாம் பாம்பேவும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    வெளியேறக் கூடாது

    வெளியேறக் கூடாது

    இந்நிலையில், அவர்களுக்கு கனாகோனா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.20 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். இருவரும் 6 நாட்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவின்றி கோவாவைவிட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Poonam Pandey and Sam Bombay were arrested by the Goa Police on Thursday for allegedly trespassing on government property and making an objectionable video. They are out on a bail bond of Rs 20,000 each.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X