Mahakumbh 2025: நல்லவேளை நிர்வாண குளியல் போடல.. மிலிந்த் சோமன், பூனம் பாண்டே கும்பமேளாவில் குளியல்!
மும்பை: மகா கும்பமேளாவில் பல பாலிவுட் பிரபலங்கள் படையெடுத்து குளியல் போட்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தை ஆமாவசையை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் உத்தர பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.
அமாவாசையை முன்னிட்டு ஏகப்பட்ட கூட்டம் கூடிய நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டின் சர்ச்சை பிரபலங்களான மிலிந்த் சோமன் மற்றும் பூனம் பாண்டே உள்ளிட்டோர் கும்பமேளாவில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதற்கு நெட்டிசன்கள் அடித்து வரும் கமெண்ட்டுகள் எல்லாம் சோஷியல் மீடியாவையே கலகலப்பாக்கி உள்ளன.
நிர்வாணமாக ஓடி சர்ச்சை: கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட படங்களில் பிரபல மாடல் நடிகரான மிலிந்த் சோமன் நடித்துள்ளார். தனது 55வது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரையில் அவர் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் முழு நிர்வாணமாக ஓடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பூனம் பாண்டேவை சொல்லவே வேண்டாம்: மிலிந்த் சோமன் போலவே நிர்வாணமாக கோவாவின் அணை அருகே வீடியோ எடுத்து வெளியிட்டு கைது செய்யப்பட்ட நடிகை பூனம் பாண்டே குறித்து சொல்லவே வேண்டாம். தனது முன்னாள் கணவர் சாம் பாம்பேவுடன் இணைந்து பல நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பூனம் பாண்டே தற்போது மகா கும்பமேளாவில் புனித நீராடி தனது பாவங்களை கழுவியுள்ளார். கடந்த ஆண்டு கேன்சர் பாதிப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி தான் இறந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய டீமை வைத்து வெளியிட்ட போஸ்டரால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவர் தான் பூனம் பாண்டே.
கும்பமேளாவில் குளியல்: நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன் மற்றும் பூனம் பாண்டே இருவரும் இந்த ஆண்டு நடைபெற்று வரும் பிரம்மாண்ட மகா கும்பமேளாவில் குளியல் போட்ட போட்டோக்களை தனித்தனியாக தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் நல்லவேளை நாகா சாதுக்களை போல இவர்களும் நிர்வாணக் குளியல் போடாமல் இருந்தார்களே என நெட்டிசன்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











