Poonam Pandey: 100 கோடி நஷ்ட ஈடு கொடுக்கணும்.. டெத் டிராமா போட்ட பூனம் பாண்டே.. வசமா சிக்கிட்டாரே!
மும்பை: கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டதாக நாட்டையே ஏமாற்றிய பூனம் பாண்டே 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் மீதும் அவரது கணவர் சாம் பாம்பே மீதும் அதிரடியாக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆபாச நடிகையான பூனம் பாண்டே cervical cancer எனும் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக திடீரென மரணம் அடைந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது டீம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

வட இந்திய மீடியாக்கள் பூனம் பாண்டே டீமை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்த நிலையில், நாடு முழுவதும் ரசிகர்கள் பூனம் பாண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டனர். ஆனால், அடுத்த நாள் நான் மரணிக்கவில்லை என வீடியோ வெளியிட்டு அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தினார்.
டெத் டிராமா: சர்ச்சைகளை மட்டுமே கிளப்பி டிரெண்டிங்கில் இடம்பெறும் பூனம் பாண்டே கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக மரணித்து விட்டதாக அறிவிப்பு வெளியான நிலையில், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாவம் இந்த இளம் வயதில் இப்படி போயிட்டாரே என இரங்கல் பதிவுகளை அவரது நண்பர்களும் சினிமா பிரபலங்கள் கூட நம்பி ஏமாந்து பதிவிட்டனர்.
நான் சாகல உயிரோடத்தான் இருக்கேன்: ஆனால், மறு நாள் சில வீடியோக்களை போட்டு நான் இன்னும் மரணிக்கவில்லை உயிரோடத்தான் இருக்கேன் என பூனம் பாண்டே பதிவிட்டது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. மேலும், நல்லதொரு நோக்கத்திற்காகவே இப்படி செய்தேன் என உலகமகா ஒரு உருட்டையும் உருட்டினார் பூனம் பாண்டே.
கேன்சர் விழிப்புணர்வு: தனது அம்மாவும் கேன்சர் பாதிப்பால் அவதிப்பட்டார். நம் நாட்டில் பல பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். அதுகுறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தவே நான் இறந்து விட்டதாக அறிவித்தேன் என விளக்கம் அளித்திருந்தார் பூனம் பாண்டே. அவரது இந்த மரண பிராங்கை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சிகளுடன் விளையாடக் கூடாது என்றும் கேன்சர் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பலரது மனங்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது உங்கள் செயல் என கண்டபடி திட்ட ஆரம்பித்தனர்.
பணத்துக்காக செய்தாரா?: 25 லட்சம் ரூபாய் பணத்துக்காகத்தான் இப்படியொரு மரண நாடகத்தை அரங்கேற்றி இருந்தார் பூனம் பாண்டே என பாலிவுட்டில் கடுமையான விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், அதெல்லாம் இல்லை என்றும் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று இன்னொரு வீடியோவும் போட்டு தொடர்ந்து மன்னிப்புக் கேட்டு வந்தார்.
100 கோடி நஷ்ட ஈடு: பூனம் பாண்டேவுக்கு எதிராக தற்போது ஃபைசன் அன்சாரி என்பவர் பூனம் பாண்டே மற்றும் அவரை பிரிந்து இருக்கும் கணவர் சாம் பாம்பே இருவரும் தான் இணைந்துக் கொண்டு இந்த மரண டிராமாவை போட்டுள்ளனர் எனக் கூறி எஃப்ஐஆர் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். புற்றுநோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக தனது சொந்த லாபத்துக்காகத்தான் பூனம் பாண்டே இதனை செய்திருக்கிறார் என 100 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். விரைவில் பூனம் பாண்டே கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











