லாக்டவுனை மீறி ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால்..பிரபல கவர்ச்சி நடிகை அதிரடி கைது..போலீசார் நடவடிக்கை!
மும்பை: ஊரடங்கை மீறி ஆண்நண்பருடன் ஊர் சுற்றிய பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு கன்னடத்திலும் நடித்துள்ளார்.

சர்ச்சை கிளம்பியது
கோவிந்தா ஹீரோவாக நடித்த ஆஹயா ஹீரோ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தனது முதல் படமான 'நாஷா'விலேயே சர்ச்சையை கிளப்பியவர். இதில் டீச்சராக நடித்திருந்தார் பூனம் பாண்டே. மாணவனுடன் தவறான உறவு வைத்திருப்பது போன்ற கதையை கொண்ட படம் இது. இந்தப் படத்துக்கு சர்ச்சை கிளம்பியது அப்போது.

சமூக வலைத்தளம்
கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் நிர்வாணமாக காட்சியளிப்பேன் என்று கூறி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருந்த பூனம் பாண்டே, அடிக்கடி, தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இளைஞர்களை தெறிக்க விடுபவர். ஆடைகளை களைவது, காதலருடன் தனிமையில் இருப்பது என ஏகத்துக்கும் கவர்ச்சியை காட்டி திணறடித்து வருகிறார்.

தனி வெப்சைட்
இந்த போட்டோகளை பதிவிடவே தனியாக வெப்சைட் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு அவ்வப்போது கிளாமர் விருந்து படைக்கும் நோக்கில், அரை நிர்வாண போஸும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் லாக்டவுன் காரண்மாக, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

ஊரடங்கை மீறி
இதற்கிடையே நடிகை பூனம் பாண்டேவை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்தில் ஊரடங்கை மீறி தனது ஆண் நண்பர் சாம் பாம்பேவுடன் மும்பை பாந்த்ரா மற்றும் மரைன் டிரைவ் பகுதியில் காரணமில்லாமல் ஊர்சுற்றியதாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரீன் டிரைவ் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

பொறுப்பில்லாமல்
அவர் அந்த பி.எம்.டபிள்யூ சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது, சட்டத்தை மதிக்கமால் ஊர்சுற்றியது, நோய் தொற்று பரவுவதற்கு காரணமான வகையில் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











