சச்சினை தோள்பட்டையில் சுமக்கும் பூனம் பாண்டே!
மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே சச்சின் டெண்டுல்கர் உருவத்தை தனது தோள்பட்டையில் பளிச்சென பச்சை குத்தியுள்ளார்.
தீவிர கிரிக்கெட் ரசிகையான பூனம் பாண்டே, மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த சச்சினினின் கடைசி டெஸ்ட் போட்டியை ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார்.
இப்போது சச்சினின் படத்தை தனது தோள்பட்டையில் பச்சை குத்தியுள்ளார்.

நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்தவர்
முன்பு இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடத் தயார் என்று அறிவித்தவர்தான் பூனம் பாண்டே.

இப்போது சச்சின் பச்சை
இந்த நிலையில் தற்போது சச்சின் படத்தை தனது வலது தோள்பட்டையின் மேல் பகுதியில் பச்சை குத்தியுள்ளார் பூனம். இந்தப் படத்தை தனது டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.

நேரிலும் பார்த்தார்
மேலும் சச்சினின் கடைசிப் போட்டியை வாங்கடே மைதானத்திறக்குப் போய் நேரிலும் பார்த்து ரசித்தார் பூனம்.

கலக்கலான கவர்ச்சி உடையில்
கலக்கலான கவர்ச்சி உடையில், அதிலும் மூவண்ணத்தைப் பிரதிபலிக்கும் உடையில் மைதானத்திற்கு வந்திருந்தார் பூனம்.

பூனம் ஆட்டத்தை ரசிக்க. ரசிகர்கள் அவரை மொய்த்தனர்
பூனம் பாண்டே ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க, ரசிகர்களோ அவரை மொய்த்துப் பார்த்தபடி இருந்தனர்.


Click it and Unblock the Notifications











