மாலத்தீவில் பிகினி உடையில் பிறந்தநாளை கொண்டாடிய சர்ச்சை நாயகி.. தீயாக பரவும் ஹாட் போட்டோஸ்!
மும்பை: பிரபல சர்ச்சை நாயகி பூனம் பாண்டே தனது 30வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி உள்ளார்.
மாலத்தீவில் பிகினி உடையில் கடற்கரை ரெசார்ட்டில் கவர்ச்சிகரமாக எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு சம்மரை மேலும் சூடாக்கி உள்ளார்.
பூனம் பாண்டேவுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை நாயகி
கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றால் மைதானத்திலேயே ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நிற்கப் போவதாக அறிவித்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால், பிசிசிஐ அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அன்று முதல் கடந்த ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு 13 நாட்களில் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தது என எப்போதுமே சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார் பூனம் பாண்டே.

ஆபாச வீடியோக்கள்
ஆபாச போட்டோக்கள், ஆபாச வீடியோக்கள் என தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பிரத்யேக ஆப்களில் வெளியிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார் பூனம் பாண்டே. சமீபத்தில் கோவாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சை கிளப்பினார். அதற்காக இவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

30 வயசு
1991ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கான்பூரில் பிறந்த பூனம் பாண்டே நேற்று தனது 30வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடி உள்ளார். இத்தனை ஆண்டுகள் தனது சேட்டைகளை பொறுத்துக் கொண்ட இருந்த ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த அவர், இன்னமும் என் குறும்புத் தனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டு இருந்தார்.

பிகினி உடைகளில்
சும்மாவே ஸ்கின் ஷோ காட்டி கதறவிடும் பூனம் பாண்டே பிறந்தநாள் அன்று சொல்லவா வேண்டும், மாலத்தீவில் குறைந்த செலவில் அனைத்து நடிகைகளும் சுற்றுலா சென்று வரும் நிலையில், நாமும் பிறந்தநாளை அங்கே கொண்டாடலாம் என பிகினி உடையில் படு கிளாமராக பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

கணவரை காணோம்
பிறந்தநாளை முன்னிட்டு மாலத்தீவில் இப்படி வித விதமாக பிகினி உடை புகைப்படங்களை பதிவிட்டு இருக்கீங்களே உங்கள் கணவர் சாம் பாம்பே எங்கே காணோம், அவருடன் ஒரு செல்ஃபி கூட எடுக்கவில்லையா? கேக் வெட்ட வில்லையா? என கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications