ஆபாச பட விவகாரம்.. போலீஸ் கஸ்டடியில் பூனம் பாண்டே.. 2 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட்!
கோவா: அரசு இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நடிகை பூனம் பாண்டேவை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில், ஹாலோவின் சர்ப்ரைஸ் என நீர் தேக்கம் ஒன்றின் அருகே நிர்வாணமாக எடுத்த ஆபாச வீடியோவை நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அரசு இடத்தில் இப்படி ஆபாச வீடியோவை எடுக்க அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியுடன் நடிகை பூனம் பாண்டே மீது புகார்கள் குவிந்துள்ளன.

அரசு இடத்தில் ஆபாச வீடியோ
ஹாலோவின் சர்ப்ரைஸ் எனக் கூறி நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. கோவாவின் கனகோனா இடத்தில் உள்ள சாப்போலி நீர்த்தேக்கம் அருகே நடிகை பூனம் பாண்டே நிர்வாண கோலத்தில் எப்படி வீடியோ எடுத்தார் என்கிற கேள்வி எழுந்தவுடன் புகார்களும் குவிந்து வருகின்றன.

பரபரப்பு புகார்
கோவா முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி சார்பாக பூனம் பாண்டேவுக்கு எதிராகவும், நீர்த்தேக்கம் அருகே அனுமதி அளித்தவர்கள் மீதும் நடவடிக்கைக் எடுக்கக் கோரி புகார் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கோவா மாநிலத்தின் நீர் மேலாண்மை துறையும் தங்கள் இடத்தில் அத்துமீறி நுழைந்ததற்கு எதிராக புகார் அளித்துள்ளது.

பொது மக்கள் போராட்டம்
நடிகை பூனம் பாண்டேவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனை எதிர்த்து, அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பூனம் பாண்டே ஷூட்டிங்கிற்கு ஆதரவாக சில போலீஸ்காரர்களும் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
கனகோனா பகுதி மக்கள் அந்த இடம் முழுக்க கடையடைப்பு செய்து போராட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில், தெற்கு கோவா காவல்துறை கண்காணிப்பாளரான பங்கஜ் குமார் சிங், இது தொடர்பாக பூனம் பாண்டேவை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். மேலும், துக்காரம் சவான் மற்றும் ஒரு கான்ஸ்டபிளையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிவித்து போராட்டத்தை கை விடக் கூறியுள்ளார்.

மிலிந்துக்கு ஒரு நியாயம்
சமீபத்தில் கோவா கடற்கரையில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் முழு நிர்வாணமாக ஓடியதை பார்த்து எல்லோரும் பாராட்டிய நிலையில், நடிகை பூனம் பாண்டே, பொது இடத்தில் நிர்வாணமாக இருந்ததை மட்டும் ஏன் டார்கெட் செய்றீங்க என #Poonampandey ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











