Poonam Pandey: பூனம் பாண்டே வீட்டில் பயங்கர தீ விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பித்த செல்லப்பிராணி!
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நேற்று இரவு தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
நாஷா, மாலினி அண்ட் கோ, தி ஜர்னி ஆஃப் கர்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பாண்டே திடீரென கவர்ச்சியைத் தாண்டி ஆபாச படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

முழு நிர்வாணமாக ஏகப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்த பூனம் பாண்டே ஆபாச படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பேவை கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஹனிமூனிலேயே சண்டை: ஆனால் திருமணமாகி ஹனிமூனுக்கு கோவா சென்று இடத்திலேயே தனது கணவர் சாம் பாம்பே தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும் அடித்து துன்புறுத்துகிறார் என்றும் பரப்பரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீசில் புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார் பூனம் பாண்டே.

அதன் பின்னர் மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்த நிலையில், சில மாதங்களில் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்தது. அந்த சண்டைக்குப் பிறகு இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டனர்.
கங்கனா ரனாவத் ரியாலிட்டி ஷோவில்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த ஆண்டு தொகுத்து வழங்கிய லாக்கப் என்னும் ஓடிடி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார் பூனம் பாண்டே. அந்த ரியாலிட்டி ஷோவுக்கு பிறகு சில ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த பூனம் பாண்டே தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எல்லை மீறிய கிளாமரை காட்டி வந்தார்.

பூனம் பாண்டே வீட்டில் தீ விபத்து: இந்நிலையில் நேற்று இரவு திடீரென நடிகை பூனம் பாண்டே வசித்து வந்த மும்பையில் உள்ள ராஜன் எனும் அப்பார்ட்மெண்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக நேற்று நடிகை பூனம் பாண்டே வீட்டில் இல்லை. ஆனால் அவரது வளர்ப்பு நாய் சீசர் வீட்டில் இருந்த நிலையில், தீப்பற்றிய போது அந்த செல்லப் பிராணியை நடிகை பூனம் பாண்டேவின் வீட்டு வேலைக்கார பெண் பத்திரமாக மீட்டு காப்பாற்றி உள்ளார்.
தனது செல்லப்பிராணி சீசர் தீ விபத்தில் தப்பித்தது அறிந்த நடிகை பூனம் பாண்டே சீசரை காப்பாற்றிய பணியாளரை பாராட்டி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென எப்படி தீ பரவியது என்கிற விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நடிகை பூனம் பாண்டேவுக்கு ஏதும் ஆகவில்லை என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications











