மைதிலி அன் கோ... மெய் சிலிர்க்கும் 5 அட்டாக் காட்சிகளில் அதகளம் செய்யப் போகும் பூனம்!

சென்னை: மைதிலி அன் கோ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படும், மாலினி அன் கோ தெலுங்குப் படத்தில் நாயகியாக பூனம் பாண்டே நடிக்கிறார். இப்படத்தில் பூனம் பாண்டேவுக்கு ஐந்து சண்டைக் காட்சிகள் உள்ளதாம்.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என அதிரடியாக தெரிவித்து பரபரப்பை உண்டாக்கியவர் தான் இந்த பூனம் பாண்டே.

கவர்ச்சிக்குப் பேர் போன இவர் தற்போது கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மைதிலி & கோ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பாண்டியராஜன், சுமன், துப்பாக்கி படத்தில் ஒரு வில்லனாக நடித்த ஜாகீர் உசேன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் அவதாரம்...

ஆக்‌ஷன் அவதாரம்...

படத்தின் தலைப்பைப் பார்க்கும் போதே அது நாயகியை மையப்படுத்திய கதை என்பது உறுதியாகிறது. கதைக்குத் தக்க படத்தில் கவர்ச்சியைப் போலவே ஆக்‌ஷனில் புகுந்து விளையாடி இருக்கிறாராம் பூனம்.

ஒரு பொண்ணு நினைச்சா...

ஒரு பொண்ணு நினைச்சா...

வீரு.கே. இசையமைத்து இயக்கி உள்ள இப்பட, ஆங்கிலப் படத்திற்கு இணையாகத் தயாரிக்கப் பட்டுள்ளதாம். சினிமாத் துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்தப் படம் உதாரணமாக இருக்கும் என வீரு கூறுகிறார்.

தீவிரவாதிகளுடன் மோதல்...

தீவிரவாதிகளுடன் மோதல்...

நாயகியின் ஊரில் தீவிரவாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள். இது அறிந்த நாயகி அவர்களுடன் மோதி இறுதியில் அந்த திட்டத்தை முறியடித்தாரா என்பது படத்தின் கதை.

5 சண்டைக் காட்சிகள்...

5 சண்டைக் காட்சிகள்...

இப்படத்தில் பூனம் பாண்டேவுக்கு ஐந்து சண்டைக் காட்சிகள் வைக்கப் பட்டுள்ளதாம். அதில் முக்கால்வாசி ஆக்சன் காட்சிகளில் பூனம் பாண்டேவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். நாயகர்களைப் போலவே பறந்து பறந்து சண்டை போட்டு பட்டையைக் கிளப்பி இருக்கிறாராம்.

கவர்ச்சிக்கு மட்டுமல்ல...

கவர்ச்சிக்கு மட்டுமல்ல...

இந்தப் படத்திற்குப் பிறகு கவர்ச்சி நடிப்பு மட்டுமின்றி ஆக்‌ஷன் நாயகியாகவும் பூனம் பாண்டே அடையாளம் பெறுவார் என மைதிலி அன் கோ டீம் உறுதி படக் கூறுகின்றனர்.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்கா, ஜெர்மன், மும்பை, ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X