தனது நீண்ட நாள் காதலருடன் பிரபல 'பரபரப்பு' நடிகை திருமண நிச்சயதார்த்தம்.. மோதிரத்துடன் செம போஸ்!
சென்னை: தனது நீண்ட நாள் காதலருடன் பிரபல பரபரப்பு நடிகை, நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே. இவர் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பெயர் பெற்றவர்.
இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தெலுங்கு கன்னடம்
அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். வேகமாக பரவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி வெளியில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தீவிரமாகி இருந்தது.

கைது செய்யப்படவில்லை
அப்போது நடிகை பூனம் பாண்டே தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் ட்ரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றார். எந்தவித காரணமும் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் எச்சரித்து விடுவித்தனர். ஆனால் மறுநாள் தான் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்தார் பூனம் பாண்டே.

திணறடித்து வருகிறார்
இந்நிலையில், அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் ஹாட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். ஓவர் செக்ஸியாகவும் சில நேரங்களில் நிர்வாண புகைப்படங்களையும் வெளியிட்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நிச்சயதார்த்தம்
இவர் சாம் பாம்பே (Sam Bombay) என்பவரை சில வருடங்களாக காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாகச் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை பூனம் பாண்டேவின் காதலர் சாம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். நிச்சயதார்த்த மோதிரத்தை அவர் பூனத்துக்கு அணிவித்துள்ள போட்டோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சிறப்பான உணர்வு
அதற்கு கேப்ஷனாக, நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். கமென்ட்ஸ் பகுதியில், நடிகை பூனம் பாண்டே, சிறப்பான உணர்வு என்று கூறியுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள், இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாம் நீங்கள் லக்கி, இனி பூனம் உங்களுக்கானவர் என்று சிலர் கூறியுள்ளனர். எப்போது திருமணம் என்றும் சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











