ஏழு ஜென்மத்திலும் உன்னோடு வாழ வேண்டும்.. பூனம் பாண்டேவுக்கு திருமணம் ஆகிடுச்சு! வைரலாகும் போட்டோஸ்!

மும்பை: கெஸ் பண்ண மாதிரியே திருமணத்திற்கு தயார் ஆன நிலையில் தான் சமூக வலைதளத்திற்கு ஒரு சின்ன கேப் விட்டு இருக்கிறார் நடிகை பூனம் பாண்டே.

தனது நிச்சயமான காதலர் சாம் பாம்பேவுடன் திருமண உடையில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.

ஆனால், அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனது என்பதை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைத் துணையான சாம் பாம்பே, மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் பாம்பே என பதிவிட்டு திருமணம் ஆனதை உறுதி செய்துள்ளார்.

கிளாமர் நடிகை

கிளாமர் நடிகை

பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகை பூனம் பாண்டே. நடிகை சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆபாச படங்களிலும் நடித்து அசத்தியவர். நாஷா எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமான இவர், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியில்

உலக கோப்பை போட்டியில்

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கோப்பையை வென்றால், ஆடைகளை அகற்றி நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என நடிகை பூனம் பாண்டே பகிரங்கமாக அறிவித்து, சர்ச்சையை கிளப்பினார். இந்திய அணி ஜெயித்த போதும், பிசிசிஐ அனுமதி கொடுக்காததால், அரங்கத்திற்குள் நிர்வாண போஸ் கொடுக்க முடியாத நிலையில், சமூக வலைதளத்தில் ஆடையை அகற்றி அவர் கொடுத்த போஸ் சர்ச்சையை கிளப்பியது.

மோதிரம் மாற்றிக் கொண்டு

மோதிரம் மாற்றிக் கொண்டு

சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், முழு நேர ஆபாச நடிகையாகவே பூனம் பாண்டே மாறிவிட்டார். இந்நிலையில், தனது காதலர் சாம் பாம்பே உடன் கடந்த ஜூலை மாதம் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்துக் கொண்டார். இருவரும் இணைந்து ஹாட் லிப் கிஸ் அடிக்கும் வீடியோக்கள், புகைப்படங்களையும் பதிவிட்டு சூடேற்றினார்.

மணக் கோலத்தில்

மணக் கோலத்தில்

தனது திருமணம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், திடீரென திருமணக் கோலத்தில் நடிகை பூனம் பாண்டே மற்றும் காதலர் சாம் பாம்பே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாண்டே. திருமணம் ஆகிவிட்டதா? வாழ்த்துக்கள் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

7 ஜென்மத்திலும்

7 ஜென்மத்திலும்

மேலும், அந்த புகைப்படத்துடன் உன்னோடு ஏழு ஜென்மத்திலும் வாழ வேண்டும் என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பாண்டே. அதற்கு அவரது வாழ்க்கைத் துணையான சாம் பாம்பே, கண்டிப்பாக மிஸ்ட்ரஸ் பாம்பே என உறுதி அளித்துள்ளார். பூனம் மற்றும் சாமுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மெஹந்தி ஃபங்கஷனும்

மெஹந்தி ஃபங்கஷனும்

திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி ஃபங்ஷனும் ஷாம்பைன் பாட்டில் பொங்க சீரும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மஞ்சள் நிற ஆடையில் கை நிறைய மருதாணி வைத்துக் கொண்டு, ரசிகர்களுக்கு அதை காட்டியபடி போஸ் கொடுத்து, வெட்கப்படும் அரிதான பூனம் பாண்டேவை ரசிகர்கள் கண்டு வியக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X