Poonam Pandey is Alive: செத்துட்டேன்னு நாடகம் ஆடிய பூனம் பாண்டே.. எல்லாம் அதுக்காக தானாம்!

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே cervical cancer எனும் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் இதுவொரு பிராங்க்கா என்றும் கேள்விகளை எழுப்பினர்.

வட இந்திய மீடியாக்கள் பூனம் பாண்டே டீமை தொடர்பு கொண்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்த நிலையில், நாடு முழுவதும் ரசிகர்கள் பூனம் பாண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டனர். ஆனால், தற்போது நான் மரணிக்கவில்லை என வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார் பூனம் பாண்டே.

Poonam Pandey is Alive and she fake her death for this awareness reason


மரண நாடகம்: நடிகை பூனம் பாண்டே கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டதாக அறிவிப்பு வெளியான நிலையில், இது உண்மை இல்லை என்றும் பூனம் பாண்டேவுக்கு அப்படியெல்லாம் இவ்வளவு இளம் வயதில் மரணம் வராது என்றும் இது வெறும் பிராங்க் தான் என அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வந்தனர். சீப்பாக பப்ளிசிட்டி தேடும் பைத்தியம் என பூனம் பாண்டேவை திட்டி வந்தனர். அதெல்லாம் தற்போது உண்மையாகி விட்டது. பூனம் பாண்டே உயிரிழந்ததாக வெளியான அனைத்து செய்திகளும் பொய்யாக போய் விட்டது. உயிருடன் தான் இருக்கிறேன் என புதிய வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மட்டும் ஒட்டுமொத்த மக்களையும் கடுப்பாக்கி உள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக: பூனம் பாண்டே தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நான் உயிரிழக்கவில்லை. அனைவரும் மன்னித்து விடுங்கள், அனைத்து மீடியாக்களிடமும் மரணித்து விட்டதாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் என்னுடைய டீம் மூலமாக தெரிவிக்க ஒரு முக்கிய காரணம் இருக்கு, என்னை போன்ற பல பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். அதுகுறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தவே நான் இறந்து விட்டதாக அறிவித்தேன் என அதிர வைத்துள்ளார்.


ரொம்ப தப்பு: ரசிகர்களின் உணர்ச்சிகளுடன் பூனம் பாண்டே விளையாடி விட்டார் என்றும் விழிப்புணர்வு என்கிற பெயரில் பூனம் பாண்டே செய்த போலி மரண டிராமாவை மன்னிக்கவே முடியாது என நெட்டிசன்கள் அவரது போஸ்ட்டுக்கு கீழ் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X