இந்த பூனம் பாண்டேவை கேட்பாரில்லையா? மீண்டும் நிர்வாணமாகப் போறாராம்!
மும்பை: தான் நடித்துள்ள நஷா படம் ஹிட்டானால் ரசிகர்களுக்காக ஆடைகளைத் துறப்பேன் என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடலான பூனம் பாண்டேவை யார் என்றே நமக்கெல்லாம் தெரியாமல் இருந்தது. அப்போது தான் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பிரபலமானார் பூனம். அதாவது இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வருவதாக அறிவித்தார்.
அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அணி வீரர்கள் முன்பு மட்டும் நிர்வாணமாவேன் என்றார்.

கொல்கத்தாவுக்காக ஆடை துறந்தார்
ஐபிஎல் போட்டிகளில் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றபோது பூனம் ஆடையின்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை வெளியிட்டார்.

நடிகையாகிவிட்டார்
பூனம் பாண்டே நஷா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி மும்பையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

போஸ்டர்கள் எரிப்பு
டெல்லி மற்றும் மும்பையில் நஷா பட போஸ்டர்கள் எரிக்கப்பட்டன.

ஹிட்டானால் மீண்டும் ஆடை துறப்பு
நஷா படம் ஹிட்டானால் ரசிகர்களுக்காக மீண்டும் ஆடை துறப்பு செய்வேன் என்று பூனம் அறிவித்துள்ளார். நஷா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











