பலாத்காரம் செய்தார்.. துன்புறுத்தினார்.. திருமணமான 12வது நாளில் கணவர் மீது பூனம் பாண்டே பரபர புகார்!

கோவா: நடிகை பூனம் பாண்டே தனது கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து கணவரான சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.

கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்தியில் அவர் நடித்த நாஷா படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அடுத்தடுத்து படங்களில் நடிக்காவிட்டாலும் தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என தனி வெப் சைட் நடத்தி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

லிவிங் டூ கேதர்

லிவிங் டூ கேதர்

இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்வேவை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகிறார். டேட்டிங்கில் இருந்த இவர்கள் லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார் பூனம் பாண்டே.

10ஆம் தேதி திருமணம்

10ஆம் தேதி திருமணம்

திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவி போன்று வாழ்ந்து வந்த இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் பூனம் பாண்டே.

திருமதி பாம்பே

திருமதி பாம்பே

மேலும் ஏழேழு ஜென்மங்களும் உன்னேடு வாழ காத்திருக்கிறேன் என்றும் தங்களின் திருமண போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார் பூனம் பாண்டே. அதனை பார்த்த கணவர் சாம் பாம்பே நிச்சயமாக திருமதி பாம்பே என கமெண்ட் பதிவிட்டிருந்தார்.

ஹனிமூன்

ஹனிமூன்

அவர்களின் திருமண போட்டோக்களும் கமெண்ட்ஸும் லைக்ஸ்களை குவித்தது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பூனம் பாண்டேவும் அவரது கணவரும் ஹனிமூன் புறப்பட்டனர். இருவரும் மும்பை விமான நிலையத்தில் கேமராக்களின் கண்களில் சிக்கினர்.

பெஸ்ட் ஹனிமூன்

பெஸ்ட் ஹனிமூன்

விமான நிலையத்திலேயே இருவரும் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்தனர். அந்த வீடியோக்கள் வைரலானது. அதனை தொடர்ந்து ஹேவிங் பெஸ்ட் ஹனிமூன் என கணவருடன் அரைகுறை உடையில் படுக்கையறையில் இருக்கும் வீடியோக்களை ஷேர் செய்தார் பூனம் பாண்டே.

கணவர் மீது புகார் - கைது

கணவர் மீது புகார் - கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கணவரான சாம் பாம்பே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கோவா போலீஸில் நடிகை பூனம் பாண்டே புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பூனம் பாண்டேவின் கணவர் சாம் பாம்பே செவ்வாய்க்கிழமையான நேற்று கோவாவில் கைது செய்யப்பட்டார்.

திங்கள் கிழமை இரவு

திங்கள் கிழமை இரவு

தெற்கு கோவாவின் கனகோனா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, தற்போது பூனம் பாண்டே ஒரு படத்தின் ஷூட்டிங்கில் உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே "திங்கள்கிழமை இரவு தனது கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பூனம் பாண்டே புகார் அளித்தார்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

மேலும் தன்னைத் தாக்கிய பின்னர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியுள்ளார். பூனம் பாண்டேவின் புகாரின் அடிப்படையில் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார் "என்று கனகோனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் கூறியுள்ளார். புகாரை தொடர்ந்து பூனம் பாண்டே கட்டாய மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X