‘’நாயை அடிப்பது போல அடித்து சித்ரவதை செய்தார்’’… பாலிவுட் நடிகையின் கண்ணீர் கதை !

டெல்லி : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் வகையில், லாக் அப் என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் கலந்து கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது கணவரால் வாழ்க்கையில் அனுபவித்த சித்ரவதைகளை கண்ணீர் மல்க கூறினார்.

லாக் அப்

லாக் அப்

கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவின் சமீபத்திய எபிசோடில் மாடல் அழகி நடிகை பூனம் பாண்டே, தான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.

நரகமான வாழ்க்கை

நரகமான வாழ்க்கை

ஆரம்பத்தில் என் மீது அன்பைபொழிந்த சாம், நாட்கள் செல்ல செல்ல என்னை மிகவும் மோசமாக நடத்த தொடங்கினார். 4 வருடங்கள் அவருடன் வாழ்ந்து இருக்கிறேன். அந்த 4 வருடமும் எனக்கு நரகம் தான், சாப்பாடு இல்லாமல், தூக்கம் இல்லாமல் பல நாட்கள் கொடுமையை அனுபவித்து இருக்கிறேன். இந்த வாழ்க்கை தேவைதானா என்று எண்ணி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன்.

நாயை அடிப்பது போல் அடிப்பார்

நாயை அடிப்பது போல் அடிப்பார்

ஒரு ரூமில் என்னை பூட்டிவைத்து, நாயை அடிப்பது போல அடிப்பார். ஒரு கட்டத்தில் அவரின் சித்ரவதை தாங்கமுடியாமல் வீட்டைவிட்டு ஓடிவந்து கோவா காவல்நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன். போலீசார் அவரை கைது செய்தனர் என்று உணர்ச்சி பொங்க கூறினார் பூனம் பாண்டே.

24 மணிநேரமும்

24 மணிநேரமும்

லாக் அப் என்ற இந்த ரியாலிட்டி ஷோவில், சிறை போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டில் போட்டியாளர்கள் 72 நாட்கள் தாக்குபிடித்து இருக்க வேண்டும். இறுதிவரை யார் அந்த சிறையிலிருந்து வெளியேறாமல் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இந்த லாக் அப் நிகழ்ச்சி எம்எக்ஸ் பிளேயர் மற்றும் ஆல்ட் பாலாஜி ஆகிய ஓடிடி தளத்தில் பிப்ரவரி 27ந் தேதி முதல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X