எங்க காதல் கதையை சொல்ல 3 மாசம் வேணும்.. கொரோனாவால் போச்சு ஹனிமூன் ட்ரிப்.. சர்ச்சை நடிகை அப்செட்!
மும்பை: எங்கள் காதல் கதையை சொல்ல மூன்று மாதங்கள் ஆகும் என்று பிரபல சர்ச்சை நடிகை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே.
சர்ச்சை நடிகையான இவர், அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார்.

எச்சரித்து விடுவித்தனர்
தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள பூனம் பாண்டே, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவார். கடந்த சில மாதங்களுக்கு முன், கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது காதலருடன் மும்பை மரைன் ட்ரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றார். காரணம் இல்லாமல் சுற்றித் திரிந்த இருவரையும் போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பினர். ஆனால் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்தார் பூனம் பாண்டே.

கிளாமர் ஸ்டில்கள்
இவர், சமூக வலைதளப் பக்கங்களில் தனது கிளாமர் ஸ்டில்களை ஓவராகவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தனது கிளாமர் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை பார்ப்பதற்காக தனி ஆப் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில், ஆபாச படங்கள் வெளியாகும் அறிவிப்புகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களை அலர்ட் செய்தும் வருகிறார்.

நிச்சயதார்த்தம்
இவரது காதலர், சாம் பாம்பே (Sam Bombay). கடந்த ஜூலை 23 ஆம் தேதி, இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை பூனம் பாண்டேவும் சாம் பாம்பேவும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். நிச்சயதார்த்த மோதிரத்தை அவர் பூனம் பாண்டேவுக்கு அணிவித்த போட்டோவையும் பதிவிட்டிருந்தனர்.

ஏழு ஜென்மங்கள்
இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி, இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதை கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் பூனம். திருமண புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பூனம், 'ஏழு ஜென்மங்கள் உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி இருக்கிறேன்' என்று பதிவிட்டு இருந்தார்.

காதல் கதை
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எங்கள் காதல் கதை ஒரு பாலிவுட் படம் போன்றது. அவரை காதலிக்க வைத்த அனைத்தையும் பட்டியலிட எனக்கு மூன்று மாதங்கள் வேண்டும். இந்தப் பூமியில் அவர் சிறந்தவர் என நினைக்கிறேன். எங்களுக்குள் பல விஷயங்கள் ஒத்திருக்கிறது. அவர் என் சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.

பூனம் பாண்டே வீட்டில்
'எங்கள் ஹனிமூன், கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் பூனம். இவர்கள் திருமணம் பாந்த்ராவில் உள்ள பூனம் பாண்டேவின் வீட்டில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











