மிருகத்தை அடிப்பது போல அடிக்கிறார்.. கணவர் சாம் பாம்பேவை விவாகரத்து செய்ய பூனம் பாண்டே முடிவு

மும்பை: ஏழு ஜென்மம் உன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் பில்டப் கொடுத்த நடிகை பூனம் பாண்டே, விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 10ம் தேதி தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூனம் பாண்டே.

இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை பூனம் பாண்டே வெளியிட்டு வைரலாக்கினார்.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை பூனம் பாண்டே, நிர்வாண படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர், பாலிவுட்டில் இருந்து விலகினார். ஆபாச பட நடிகையான பூனம் பாண்டே, தயாரிப்பாளர் சாம் பாம்பே என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். காதலருடன் நிர்வாணமாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

ஏழு ஜென்மம்

ஏழு ஜென்மம்

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10ம் தேதி, திருமணமான புகைப்படங்களை பதிவிட்டு, ஏழு ஜென்மத்திற்கும் உன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என கணவன் சாம் பாம்பே பற்றி உருகி இருந்தார் நடிகை பூனம் பாண்டே. பூனம் பாண்டே, சாம் பாம்பே திருமண புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வந்தன.

வில்லங்கமான ஹனிமூன்

வில்லங்கமான ஹனிமூன்

திருமணம் ஆன கையுடன் ஹனிமூனுக்காக இருவரும் கோவா சென்றனர். ஹனிமூன் வந்த இடத்திலும் கணவர் பிசியாக வேலை செய்வதாகவும், அவரை கவர என்ன எல்லாம் செய்கிறேன் என்றும் ஆடையை கழட்டும் அந்தரங்க வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். ஆனால், திடீரென கணவருக்கு எதிராக புகார் அளித்து அவரை கம்பி எண்ண வைப்பார் என்று யாருமே எதிர்பார்க்க வில்லை.

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

திருமணமான 13 நாட்களில் ஹனிமூன் சென்ற நிலையில், தனது கணவர் தன்னை காட்டுத் தனமாக தாக்கினார் என்றும், பலாத்காரம் செய்தார் என்றும் நடிகை பூனம் பாண்டே பரபரப்பு புகார் அளித்து சாம் பாம்பே கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தேனிலவுக்காக வந்த இடத்தில் திடீரென கணவன் சாம் பாம்பே மீது இப்படி ஒரு புகார் அளித்து அவரை கைது செய்ய வைக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு நடிகை பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார். காதலிக்கும் போதே, அவருக்கு கோபம் அதிகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், திருமணத்திற்கு பின்னர் சரியாகி விடுவார் என எதிர்பார்த்தேன்.

மிருகத்தை அடிப்பது போல

மிருகத்தை அடிப்பது போல

ஆனால், திருமணத்திற்கு பிறகும் அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. ஜாலியாக ஹனிமூன் வந்த இடத்தில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர் என்னை ஒரு மிருகத்தை அடிப்பது போல அடிக்கத் தொடங்கினார். மூஞ்சியில் குத்தினார். வலுக்கட்டாயமாக, பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். நான் அவரிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடினேன். ஹோட்டல் ஊழியர்கள் தான் போலீசுக்கு போன் செய்தார்கள் என்றார்.

சேர்ந்து வாழ முடியாது

சேர்ந்து வாழ முடியாது

இப்படி மிருகத்தை போட்டு அடிப்பது போல அடிக்கும் நபருடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது. அவரை மிகவும் காதலித்தேன். ஆனால், அவருக்குள் இருக்கும் மிருகத்தை என்னால் சமாளிக்க முடியாது. இனி சிங்கிளாகவே வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர மீண்டும் இந்த திருமண வாழ்க்கையை தொடர விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

Recommended Video

ஆண் நண்பருடன் வேற லெவல் யோகா.. புக் படிக்க உங்களுக்கு வேற இடமே கிடக்கலையா அபிகைல் பாண்டே?
ஜாமீன்

ஜாமீன்

கோவா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தயாரிப்பாளரும் பூனம் பாண்டேவின் கணவருமான சாம் பாம்பே, 20 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் புதனன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 4 வாரங்களுக்கு கோவாவில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X