டுவிட்டரில் பிரதமர் அலுவலகம்: பிகினியில் பூனம் 'ஜில் ஜில்' வரவேற்பு!

மாடல், டிவி ரியாலிட்டி ஷோ நாயகி பூனம் பாண்டே ஏதாவது வில்லங்கமான விஷயத்திற்காகத் தான் பேசப்படுவார். பூனம் என்றால் யார் என்று கேட்கும் நிலையில் இருந்த அவர் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் அரங்கில் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அறிவித்து பிரபலமானவர்.
அவருடைய அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியதும் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் அணியினர் முன்பு மட்டும் நிர்வாணமாகத் தோன்றுவேன் என்றார். பிறகு அதையும் செய்ய முடியாமல் தவித்தார். இதனால் இப்போது தனது ட்விட்டர் பக்கத்திலும், தனது புதிய இணையதளத்தின் பக்கங்களிலும் கவர்ச்சியை கொட்டி நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் டுவிட்டரில் இணைந்தது. அதை பூனம் தனது பாணியில் வரவேற்றுள்ளார். அதாவது, தான் வெள்ளை பிகினியில் தோன்றும் கவர்ச்சியான படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது என்று கேள்விப்பட்டேன். அவருக்கு பூனம் பாண்டேவும் டுவிட்டரில் இருப்பது தெரியுமா? பிரதமர் அலுவலகத்தை வரவேற்கத் தான் இந்த புகைப்படம் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
இந்த டீலிங் கூட நல்லாத்தான் இருக்கு...!


Click it and Unblock the Notifications











