இந்தியா உலக கோப்பையை வென்றால் சர்ப்ரைஸ் இருக்கு.. பூனம் பாண்டே மீண்டும் பகீர் போஸ்ட்!

மும்பை: பாலிவுட் நடிகையும் அடல்ட் பட நாயகியுமான பூனம் பாண்டே இந்தியா உலக கோப்பையை வென்றால் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு என பதிவிட்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பி உள்ளார்.

சினிமா படங்களை கடந்து பலான படங்களிலும் நடித்து வரும் பூனம் பாண்டே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், மீண்டும் ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

Poonam Pandey wrotes Surprise awaits! What if India wins World Cup 2023? What’s the plan this time?

2011ம் ஆண்டு உலக கோப்பை: ஏற்கனவே, இந்தியா உலகக் கோப்பையை வென்றால் மைதானத்திலேயே நிர்வாணமாக ஓடுவேன் என பதிவிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியவர் பூனம் பாண்டே. 2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்ற நிலையில், பூனம் பாண்டேவை மைதானத்தில் ஆடையின்றி ஓட அனுமதிக்கவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் தனது நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாண்டே தொடர்ந்து பல ஆபாச படங்களிலும் நடித்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார்.

கணவருடன் விவாகரத்து: ஆபாச படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பே என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே கோவாவுக்கு ஹனிமூன் சென்ற போதே இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக கணவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

அதன் பின்னர் மீண்டும் இருவரும் இணைந்து சில மாதங்கள் வாழ்ந்த நிலையில், மறுபடியும் ஒரு பிரச்சனை ஏற்பட நிரந்தரமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

மீண்டும் சர்ப்ரைஸ்: கங்கனா ரனாவத் ஓடிடியில் பிக் பாஸ் போன்ற லாக்கப் எனும் நிகழ்ச்சியை நடத்திய நிலையில், அதில் போட்டியாளராக பூனம் பாண்டே பங்கேற்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்தார். அதன் பின்னர், சில ஆல்பம் வீடியோக்களில் நடித்து வந்த பூனம் பாண்டே தற்போது மீண்டும் உலகக் கோப்பை போட்டி குறித்து பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இன்று நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களின் விருப்பத்திற்காக ப்ளூ ஜெர்ஸி டி-ஷர்ட் அணிந்துள்ளேன் என்றும் இந்தியா இன்று உலகக் கோப்பையை வென்றால் ரசிகர்களுக்கு நிச்சயம் சூப்பர் சர்ப்ரைஸ் இருக்கிறது என பதிவிட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X