Poor To Kubera: சினிமா பின்புலம் இல்லை.. முதல் பட சம்பளம் ரூ 10K முதல் விஜய்யுடன் மோதும் அளவுக்கு SK வளர்ச்சி
சென்னை: சினிமா உலகில் எந்த பின்புலமும் இல்லாமல் கால் வைத்து அதில் ஸ்டாராக மாறி நிற்கும் பிரபலங்களின் வளர்ச்சி குறித்தும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் Poor To Kubera என்ற தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பார்க்கலாம்.
விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அதுவும் கதாநாயகனாக வென்று, வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் வெற்றி பெரும்பான்மையான மக்களின் வெற்றி என்று உணரவைத்ததே சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய வெற்றியாக கணக்கிடலாம். நாலு வார்த்தை பேசினால் அதில் ரெண்டு வார்த்தை காமெடியாக பேசறானே இந்த பையன் என சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால கட்டம் ரொம்பவுமே சவால்கள் நிறைந்தது.
விஜய் தொலைக்காட்சி போன்ற டி.ஆர்.பியில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், விஜய் விருதுகளில் தென்னிந்திய பிரபலங்கள் முன்னிலையிலும் நகைச்சுவையாக பேசி பலரது கவனத்தையும் நன்மதிப்பையும் பெற்றார். சிவகார்த்திகேயன் ஒரு காமெடியன் மெட்டீரியல் என நினைத்த தனுஷ் அவருக்கு 3 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தனுஷ் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்த காலகட்டத்தில்தான், இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் ரூபாய் 10 ஆயிரம்.

ஹீரோ மெட்டீரியல்: 3 படத்திற்கு பின்னர் மெரினா ரிலீஸானது. சிவகார்த்திகேயன் ஹீரோ மெட்டீரியல் என புரிந்து கொண்ட தனுஷ் அதன் பின்னர் தனது சொந்த தயாரிப்பில் எதிர் நீச்சல் என்ற படத்தை சிவகார்த்திகேயனுக்காக தயாரித்தார். ஜனரஞ்சகமான கதைகளைத் தேர்வு செய்த நடித்த சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் மெருகேறி கொண்டே வந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் போன்ற படங்கள் அவருக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
350 கோடிகள் வசூல்: சில படங்கள் இவருக்கு சறுக்கினாலும், அவை வேகத் தடைகளாக மட்டுமே இருந்ததே தவிர இவரின் வளர்ச்சியை முடக்கி விடவில்லை. அப்படியே முடக்கி இருந்தாலும் சிவா அதிலிருந்து மீண்டு வந்திருப்பார். தமிழ் சினிமாவில் ரூபாய் 350 கோடிகள் வசூலைக் குவித்த நடிகர்கள் வரிசையில் ரஜினி, விஜய், கமல்ஹாசனுக்கு பின்னர் அவர் தான் உள்ளார். அமரன் படம் கொடுத்த வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை மொத்தமாக உயர்த்தி விட்டது. அவர் இப்போது ஒரு படத்திற்கு சுமார் 75 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் பிராஃபிட் ஷேரிங்கிலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Poor To Kubera : சமூக வலைதளங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படியானவர்கள் எல்லோரும் சாதாரண மக்களில் இருப்பவர்கள்தான். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் இப்படி சாதாரண குடும்பத்தில் இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்து, வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்துவைத்து இன்றைய பலருக்கும் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நிற்கிறார் சிவா. சினிமாவில் தனக்கு எந்தவிதமான பின்புலமுமே இல்லாமல் சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அவரது வளர்ச்சியும் வெற்றியும் பலருக்கும் உத்வேகம். 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர், கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திற்கு கதாநாயகனாக நடித்து கமல் ஹாசனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். வரும் பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகனோடு பராசக்தியாக மோதவுள்ள சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் சொந்த காலில் வெல்லும் Poor To Kubera தான்.


Click it and Unblock the Notifications











