அய்யோ பாவம், அடுத்தடுத்தா?: இது என்னய்யா விஜய்க்கு வந்த சோதனை
Recommended Video
சென்னை: பாவம் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து கதை திருட்டு பிரச்சனையில் சிக்குகின்றன.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் சர்கார் படத்தின் கதை தன்னுடயது என்று கூறி வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் விசாரித்து வருணுக்கு ஆதரவு தெரிவித்தது.

சர்கார்
சர்கார் பட டைட்டில் கார்டில் கதை, நன்றி வருண் என்று குறிப்பிட்டார் முருகதாஸ். டைட்டில் கார்டில் வருணின் பெயரை போட்ட போதிலும் கதை தன்னுடையது என்று கடைசி வரை நிலையாய் நின்றார் முருகதாஸ். சர்கார் எனது செங்கோல் படத்தின் கதை தான். விஜய்க்கு என் செங்கோலை பரிசளிக்கிறேன் என்றார் வருண்.

கதை திருட்டு
சர்கார் கதை பிரச்சனை ஏற்பட்டபோது இது என்னடா விஜய் அண்ணாவுக்கு வந்த சோதனை, பட ரிலீஸுக்கு முன்பு இப்படி கதை திருட்டு பிரச்சனை வந்துவிட்டதே என்று ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 63 படமும் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளது.

தளபதி 63
விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளன. முருகதாஸாவது கதை என்னுடையது தான் என்று கூறி ஆரம்பத்தில் இருந்து மல்லுக்கட்டினார். ஆனால் தளபதி 63 விவகாரத்தில் அட்லி தரப்பு குறும்பட இயக்குநர் செல்வாவிடம் சமரசம் பேசியுள்ளது. கதை திருட்டை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அட்லியின் மேனேஜரும், ஏஜிஎஸ் நிறுவனமும் கூறியதாக செல்வா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பையர்
அட்லி பிற கதைகளில் இருந்து இன்ஸ்பையர் ஆகி படம் எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு குறும்பட இயக்குநரின் கதையை சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் அந்த கதையை தெரிவித்திருந்த நிலையில் அட்லி அதை சுட்டுவிட்டதாக கூறுகிறார் செல்வா.

படம்
கதை திருட்டு விவகாரத்தில் பாவம் விஜய் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஏனோ அவர் படங்களுக்கே இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அவர் கதை பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டது ஒரு குத்தமா?. இனி கதை கேட்கும்போது அது சுட்ட கதையா, சுடாத கதையா என்பதை கண்டுபிடிக்க விஜய் தனிக்குழு அமைக்கணும் போலயே.


Click it and Unblock the Notifications











