நடிகை பூர்ணா வழக்கு.. இன்னொரு ஹீரோயினை வளைக்க முயன்ற மோசடி கும்பல்.. நடிகரிடம் போலீஸ் விசாரணை!

By

கொச்சி: நடிகை பூர்ணாவை போல இன்னொரு நடிகையிடமும் பழகி மோசடி செய்ய, அந்த கும்பல் முயன்றுள்ள செய்தி இப்போது வெளியாகி உள்ளது.

தமிழில், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.

இவர் மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது ஒரிஜினல் பெயரில் நடித்து வருகிறார்.

கொடுக்கவில்லை

கொடுக்கவில்லை

பூர்ணாவின் அம்மா ரவ்லா, கேரளா மாநிலம் மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பழகி உள்ளனர்

பழகி உள்ளனர்

போலீஸ் தரப்பில் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன் ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு, திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வந்துவிட்டனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். மறுத்ததால் மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். சிலரைத் தேடி வருகிறோம்' என்றனர்.

பாலியல் அத்துமீறல்

பாலியல் அத்துமீறல்

பின்னர் கும்பலை சேர்ந்த அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதும் மேலும் 5 மாடல்கள், இந்தக் கும்பலிடம் ஏமாந்ததாகப் புகார் கூறினர். தனி அறையில் பூட்டி வைத்து நகைகள், பணத்தைப் பறித்துள்ளனர். பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை பூர்ணா, கொச்சி கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் சென்று நேற்று விளக்கம் அளித்தார்.

சரியான திசையில்

சரியான திசையில்

அப்போது பேசிய பூர்ணாவின் அம்மா, விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் திருப்தியாக இருக்கிறேன் என்றார். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஹேர் ஸ்டைலிஷ்ட் ஹாரிஸ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சூர் பகுதியில் உள்ள சாவக்காட்டை சேர்ந்த இவர், குற்றவாளி ரபீக்கின் உறவினர். இவர் வளைகுடா நாட்டில் சலூன் வைத்துள்ளார்.

நடிகர் தர்மராஜன்

நடிகர் தர்மராஜன்

மலையாள சினிமா தொடர்பு இவருக்கு இருப்பதாலும் நடிகைகளின் மேக்கப் மேன்களுடன் தொடர்பில் இருப்பதாலும் இவர் மூலமாக நடிகை பூர்ணாவை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் தர்மராஜன் போல்காட்டியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சென்று இவர் விவரங்களை தெரிவித்தார்.

நடிகைகள் பூர்ணா, மியா

நடிகைகள் பூர்ணா, மியா

விசாரணைக்குப் பின் பேசிய தர்மராஜன், எனக்கு குற்றவாளிகளைத் தெரியாது. சினிமா தயாரிப்பு நிர்வாகி ஷாஜி பட்டக்கரா என்பவர் எனது நம்பரை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அவர்கள் என்னிடம் நடிகைகள் பூர்ணா, மியா ஆகியோர் நம்பர்களை கேட்டார்கள்' என்று தெரிவித்துள்ளார். அந்த மியா, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த வழக்கில் மேலும் 5 பேர், அந்த கும்பல் மீது புகார் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X