பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல்..மேலும் ஒரு நடிகை புகார்..பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கொடூரம்

By

கொச்சி: பிரபல நடிகையை திருமணம் செய்வதாக பழகி, பணம் பறிக்க முயன்ற கும்பல் மீது மேலும் ஒரு நடிகை உட்பட 5 பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.

மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் படங்களில் நடித்து வருபவர், பூர்ணா.

இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, வித்தகன், தகராறு, கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்

பணம் கேட்டு மிரட்டல்

லாக்டவுன் காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் வசித்துவருகிறார். இவரது அம்மா ரவ்லா, மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை ஒரு புகாரை அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்றாகப் பழகினர்

நன்றாகப் பழகினர்

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன் ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு, தான் பூர்ணாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். போட்டோவை அனுப்புகிறேன் என்று கூறி, வேறொருவர் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் நன்றாகப் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர்.

சந்தேகம் அடைந்தனர்

சந்தேகம் அடைந்தனர்

திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வந்துவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். மறுத்ததால் மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார்.

சொகுசு காரில்

சொகுசு காரில்

வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். சிலரைத் தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த தகவல் வெளியானதும் கைது செய்யப்பட்ட கும்பல் மீது மேலும் சிலர் நேற்று புகார் கொடுத்தனர். அதில் ஒருவர் மாடல். அவர் கூறும்போது, 'நான் உட்பட மொத்தம் 5 மாடல்களை காரில் அழைத்துச் சென்றார்கள்.

அடைத்து வைத்தனர்

அடைத்து வைத்தனர்

திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் உள்ள ஓட்டல்களில் அடைத்து வைத்து பணம் மற்றும் நகைகளை பறித்தனர். நான் 2 சவரன் தங்க சங்கிலியை பறிகொடுத்தேன். மற்றவர்கள் ரூ.4 லட்சத்தை இழந்தார்கள்' என்று தெரிவித்திருந்தார். புகார் கொடுத்தவர்களில் ஒருவர் ஆழப்புழாவை சேர்ந்த பிரபல நடிகை. அவர் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து 5 பெண்கள் இன்று புகார் கொடுத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அதில் சிலர் தங்க நகைகளை பறிகொடுத்துள்ளனர். சில பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சலாம் என்பவர் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காசர்கோடை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இந்த கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கொச்சி போலீஸ் கமிஷனர் விஜய் சக்காரே தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X