அடேங்கப்பா.. 10 லட்சம் பேரா.. மனசெல்லாம் பூரிச்சுப் போச்சு.. பூர்ணாவுக்கு!
சென்னை : கேரளாவை சேர்ந்த நடிகை பூர்ணா, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டி உள்ளதை பூர்ணா இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு மில்லியன் ஃபாலோவர்களை எட்ட செய்த அனைவருக்கும் நன்றி. இது போன்று நீங்கள் அளிக்கும் ஆதரவு தான் னெ்னை மேலும் கடினமாக உழைக்க செய்கிறது. இன்ஸ்டா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் நன்றி.
என்னை ஊக்கப்படுத்தி, ஆதரவு வழங்கி வரும் நீங்கள் தான் என்னுடைய பலம். இந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என பூர்ணா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











