இந்தியில் பிசி.. கங்கனாவின் 'தலைவி'யில் பிரியாமணி இல்லையாம்... சசிகலாவா யார் நடிக்கிறார்னு பாருங்க!

By

சென்னை: தலைவி படத்தில் இருந்து நடிகை பிரியாமணி விலகியுள்ளார். இந்தி படத்தில் நடிப்பதற்காக அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Thalaivi Official MGR First Look | Thalaivi Teaser | Kangana | Arvind Swami

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்தவர்.

3 மொழிகளில்

3 மொழிகளில்

எம்.ஜி.ஆர்.ஆக நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கிறார். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

எம்ஜிஆர் லுக்

எம்ஜிஆர் லுக்

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் கங்கனாவின் தோற்றத்தை ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். பின்னர் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப் பட்டது. அதில் அரவிந்த்சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினர்.

கட்சி பார்டர் சேலை

கட்சி பார்டர் சேலை

இதற்கிடையே இந்தப் படத்துக்காக கங்கனா நடனம் ஆடும் ஸ்டில்கள் வெளியாகின. அதுவும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயலலிதாவாக வரும் கங்கனா ரணவத்தின் 2-வது லுக் தற்போது வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில், அ.தி.மு.க கட்சி கொடி நிறத்தில் பார்டர் போட்ட சேலை அணிந்துள்ளார் கங்கனா ரனவத். இந்த தோற்றம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

சசிகலாவாக

சசிகலாவாக

இந்தப் படத்தில் சசிகலாவாக நடிக்க, நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவர் தொடர்பான காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதற்குள் பிரியாமணிக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியில், மைதான் படத்தில் அஜய்தேவ்கன் ஜோடியாக கீரித்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. அவர் விலகியதை அடுத்து அந்தப் படத்தில் பிரியாமணி ஒப்பந்தமானார்.

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

அதோடு தமிழில் சூப்பர் ஹிட்டான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பிரியாமணி நடித்துவருகிறார். இதனால் அவருக்கு தலைவி படத்துக்கு கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை பூர்ணாவை சசிகலா கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். பூர்ணா, தமிழில் முனியான்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சவரக்கத்தி, கொடிவீரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X