பூர்ணா திருமணம்: கணவருடன் மாலையும் கழுத்துமாக எவ்ளோ அழகா இருக்காரு பாருங்க.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: நடிகை பூர்ணா என்கிற ஷாம்னா கசீமின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்களை நடிகை பூர்ணா தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.

கேராளாவை சேர்ந்த நடிகை பூர்ணா மஞ்சு போலொரு பெண்குட்டி எனும் மலையாள படத்தில் கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமானார்.

தமிழில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

துபாயில் திருமணம்

துபாயில் திருமணம்

கந்தக்கோட்டை, துரோகி, தகராறு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. துணை நடிகையாக காப்பான், தலைவி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிசாசு 2 படத்திலும் பூர்ணா நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் நடிகை பூர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், நேற்று துபாயில் அவருக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிந்து விட்டதாக வதந்தி

பிரிந்து விட்டதாக வதந்தி

நடிகை பூர்ணாவுக்கு துபாயை சேர்ந்த ஷானித் ஆசிஃப் அலி என்பவருக்கும் நிச்சய்தார்த்தம் நடந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என பரபரப்பு தகவல்கள் பரவின. ஆனால், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது திருமணத்தையே முடித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமிய முறைப்படி

இஸ்லாமிய முறைப்படி

நடிகை பூர்ணா என்கிற ஷாம்னா கசீம் மற்றும் ஷானித் ஆசிஃப் அலியின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி துபாயில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட திருமண புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

மாலையும் கழுத்துமாக

மாலையும் கழுத்துமாக

33 வயதாகும் நடிகை பூர்ணா துபாயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவருடன் மாலையும் கழுத்துமாக அழகாக அவர் இருக்கும் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட பூர்ணா, நான் ரொம்ப எல்லாம் அழகு கிடையாது. ஆனால், உன்னோடு இருக்கும் போது எந்த குறையும் இல்லாதவளாக தெரிகிறேன் என காதல் பொங்க கேப்ஷன் போட்டிருக்கிறார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படங்களை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க பூர்ணா இப்படியே எப்போதும் கணவருடன் மகிழ்ச்சியாக இருங்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். பிசாசு 2, படம் பேசும் மற்றும் அம்மாயி என மூன்று தமிழ் படங்கள் பூர்ணா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X