திரிஷா படத்திலிருந்து பூர்ணா திடீர் விலகல்... ஏன்..ஏன்.. ஏன்?
ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் ரம் என்ற படத்திலிருந்து திடீரென பூர்ணா விலகி விட்டாராம். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் மொத்தம் 3 நாயகிகள். அதில் ஒருவர்தான் பூர்ணா. மற்ற இரு நாயகிகளும் படத்தில் இருக்கும்போது பூர்ணா மட்டும் ஏன் போய் விட்டார் என்று தெரியவில்லை.
ஆனால், தனக்கு முக்கியத்துவம் தராமல் இன்னொரு ஹீரோயினையும் அறிமுகப்படுத்துவதாக கூறித்தான் பூர்ணா விலகியதாக சொல்கிறார்கள்.

ரம் என்றால் என்ன...
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் படமான ரம் என்பதற்கு அர்த்தம் ரம்பா, ஊர்வசி, மேனகா என்பதின் சுருக்கமாம்.

திரிஷா - பூர்ணா- நிஷா படேல்
படத்தில் மொத்தம் 3 நாயகிகள். திரிஷா, பூர்ணா, நிக்ஷா பட்டேல் ஆகியோரே இவர்கள்.

பொங்கி எழுந்த பூர்ணா
இந்த நிலையில் பூர்ணாவின் கேரக்டரிலும், கதையிலும் மாற்றம் செய்ததால் பூர்ணா பொங்கி விட்டார்.

நாலாவதாக ஒண்ணா...?
ஏற்கெனவே மூன்று ஹீரோயின்கள் உள்ள இந்த படத்தில் நான்காவதாகவும் ஒரு பெண் கதாபாத்திரத்தை புகுத்துகிறார்கள் எனவே இப்படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டார் பூர்ணா.

அவருக்குப் பதில் இஷா சாவ்லா..
இதையடுத்து, அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க இஷா சாவ்லாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எம்.ராஜூ இயக்குகிறார். பூர்ணா விலகியதையடுத்து கதையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர்.

சார்மியும் களம் புகுந்தார்
பூர்ணா சொன்னது போலவே தற்போது நான்காவதாக ஒரு நாயகியையும் சேர்த்துள்ளனர். அவர்தான் கவர்ச்சி நாயகி சார்மி.

சரி பூர்ணா இப்ப என்ன செய்கிறார்...
பூர்ணா தற்போது அர்ஜுனன் காதலி, ஜன்னலோரம், படம் பேசும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேசாம, தமிழ் பக்கம் வாங்க பூர்ணா..


Click it and Unblock the Notifications











