பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!

By

சென்னை: பிரபல நடிகை பாவாடை, தாவணியில் வெளியிட்டுள்ள வேற லெவல் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன.

தமிழில் பூர்ணா என்ற பெயரில் நடித்து வருபவர் மலையாள நடிகை ஷாம்னா காசிம்.

தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் நடித்துவரும் பூர்ணா, சிறந்த கிளாசிக்கல் நடனக் கலைஞர்.

சசிகலா கேரக்டர்

சசிகலா கேரக்டர்

தமிழில், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் பூர்ணா. இப்போது தலைவி படத்தின் சசிகலாவாக நடித்திருக்கிறார். நவரசா என்ற வெப்சிரீஸிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அம்மா புகார்

அம்மா புகார்

சில மாதங்களுக்கு முன், பூர்ணாவை திருமணம் செய்வதாக ஒரு கும்பல் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக அவர் அம்மா கொடுத்த புகாரை அடுத்து சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

சினிமாவை மிஞ்சும்

சினிமாவை மிஞ்சும்

இது தொடர்பாக பூர்ணா கூறும்போது, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக சினிமாவை மிஞ்சும் கொடுமைகள் நடக்கின்றன என்று தெரிவித்திருந்தார். சமீபகாலமாக நடிகைகள் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர்.

பாவாடை, தாவணி

பாவாடை, தாவணி

நடிகை பூர்ணாவும் போட்டோஷூட்டில் அதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவின. இப்போதும் பாவாடை, தாவணியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதில் தனது ஹேர்ஸ்டைலை மொத்தமாக மாற்றியுள்ளார்.

அப்படி போடு

அப்படி போடு

விதவிதமான எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தி இந்தப் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். இதற்கு கேப்ஷனாக, 'அப்படி போடு' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகின்றன. இதற்கு நெட்டிசன்ஸ், கண்டபடி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வேற லெவல்ல

வேற லெவல்ல

'இதில் உங்கள் எக்ஸ்பிரஷன்கள் அருமையாக இருக்கின்றன, வாழ்த்துகள் என்று சில நெட்டிசன்ஸ் புகழ்ந்துள்ளனர். உங்கள் ஹேர் ஸ்டைல் செம அழகாக இருக்கிறது, இந்த போட்டோஸ்ல நீங்க வேறலெவல்ல இருக்கீங்க என்று சிலர் கூறியுள்ளனர். பலர் அவர் அழகை அப்படி வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X