பேபி டால் லுக்கில் பிரபல நடிகையின் கலக்கல் டான்ஸ் போஸ்.. அப்படி பாராட்டும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை பேபி டால் லுக்கில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருபவர், பூர்ணா. மலையாளத்தில், ஷாம்னா காசிம் என்ற தனது ஒரிஜினல் பெயரில் நடித்து வருகிறார்.

இப்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சவரக்கத்தி

சவரக்கத்தி

இவர் இதற்கு முன், தமிழில், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, துரோகி, வித்தகன், தகராறு, கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தலைவி உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

மோசடி கும்பல்

மோசடி கும்பல்

சமீபத்தில் இவர் மோசடி கும்பலிடம் சிக்க இருந்தார். சரியான நேரத்தில் அதுபற்றி அவர் போலீஸில் புகார் செய்ததால், தப்பினார். இதுபற்றி அவர், எனக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதைப் பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்று எங்கள் குடும்பத்தை அணுகி பெண் கேட்டது.

உணர முடிகிறது

உணர முடிகிறது

அவர்கள் கொடுத்த முகவரி, பெயர் அனைத்தும் போலி என்பது தெரிந்தது. பிறகு பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினர். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தோம்.மோசடி புகாரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் . மோசடியால் பாதிக்கப்படும் பெண்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது உணர முடிகிறது என்று கூறியிருந்தார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

இந்நிலையில், சமீபகாலமாக நடிகைகள் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். நடிகை பூர்ணாவும் சமீப காலமாக அதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்.

பேபி டால்

பேபி டால்

தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. பேபி டால் போல இருக்கும் இந்த புகைப்படத்தில் அவர் நடன அசைவுகளுடன் போஸ் கொடுத்துள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

அழகா இருக்கீங்க

அழகா இருக்கீங்க

சில நெட்டிசன்ஸ் வழக்கம் போல நீங்க அப்படி அழகா இருக்கீங்க என்று பாராட்டித் தள்ள, சிலர் மாற்றமே இல்லை அப்படியே பொம்மைதான் என்று பாராட்டியுள்ளனர். சிலர் இந்த டிரெஸும் கலரும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கு என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X