BB7 show: அடித்துக் கொண்ட பூர்ணிமா -மாயா.. வச்சா குடுமி சரச்சா மொட்டையா.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 ஷோ இன்றைய தினம் 58வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறார்.

கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

Poornima and Maya Fight: Vijay TVs Bigg Boss 7 Tamil November 28th 2023 Promo Released

பிக்பாஸ் நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ரசிகர்களின் பேவரைட் ஷோவாக தொடர்ந்து மாஸ் காட்டிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

58 வது நாள் எபிசோட்: இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 58வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் முதல் ப்ரமோவில் விஷ்ணுவும் பூர்ணிமாவும் இணைந்து பேசியதை பார்க்க முடிந்தது. தான் யாருடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் எதையும் செய்யவில்லை என்றும் தான் தானாகத்தான் இருப்பதாகவும் பூர்ணிமா குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து தான் விஷ்ணுவுடன் பேசியதை பார்த்த மாயா, விஷ்ணு தன்னை கன்ட்ரோல் செய்கிறார் என்று கூறுவார் என்றும் பேசுவதாக அமைந்தது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சண்டையிட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது. நிக்சனை பூர்ணிமா காப்பாற்றுவதாக குற்றச்சாட்டினை மாயா பதிவு செய்தார். எந்த அநீதியும் நடக்கவில்லை என்று பூர்ணிமா கூற, விஷ்ணு அடித்தால் தான் பாயிண்டை எடுத்து வைப்பதாக விஷ்ணுவையும் இந்த சண்டையில் கோர்த்துவிட்டார் மாயா. இதையடுத்து பூர்ணிமாவையும் விஷ்ணுவையும் சம்பந்தப்படுத்தி விசித்ரா கமெண்ட் அடிக்க, அப்படியெல்லாம் கிடையாது என்று பூர்ணிமா அலறுகிறார்.

அடித்துக் கொண்ட மாயா -பூர்ணிமா: இந்த வாரத்தின் கேப்டனாக நிக்சன் இருந்துவரும் நிலையில், நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகமாக இல்லாத நிலை காணப்படுகிறது. மிகவும் அந்நியோன்யமாக இருந்த பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் தற்போது பகை காட்டி வருவது மட்டுமே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக இவர்கள் இருவரும் ஒன்றாக அனைத்து விஷயங்களையும் செய்து வந்தனர். பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதிலும் இவர்கள் பங்கு அதிகமாக இருந்தது.

விஷ்ணுவிடம் நெருக்கம் காட்டும் பூர்ணிமா: இந்நிலையில் கடந்த சில தினங்களாக விஷ்ணுவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் பூர்ணிமா. இந்த விஷயம்தான் மாயா கடுப்பிற்கு காரணம் என்றும் அதனால்தான் அவர் பூர்ணிமாவிற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பூர்ணிமாவிற்கு எதிராக நாமினேட் செய்த மாயா, ஒன்று அவர் இருக்கனும் இல்லையென்றால் தான் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X