எங்களுக்கு அவ்வளவு கஷ்டம்.. யாருக்கும் அப்படி வரக்கூடாது.. பாக்யராஜின் மனைவி புலம்பல்

சென்னை: இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க பூர்ணிமா அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

poornima bhagyaraj santhanu

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.

பாக்யராஜ் குடும்பம்: இதற்கிடையே பாக்யராஜின் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு தமிழ் சினிமாவில் அடையாளப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யாவோ பாரிஜாதம் என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

பூர்ணிமா பேட்டி: இந்நிலையில் பூர்ணிமா பாக்யராஜ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எங்களுக்கு கஷ்டமே வந்ததில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வந்த கஷ்டம் மாதிரி வேறு யாருக்கும் வந்துவிடவே கூடாது என்றுதான் நான் எப்போதுமே நினைத்துக்கொண்டிருப்பேன். ஏனெனில் இந்த சினிமா துறை என்பது அப்படிப்பட்டது.

ஒன்றாக இருக்கிறோம்: அந்த கஷ்டம் வந்தபோது நாங்கள் நினைத்தது ஒன்றுதான். அதாவது ஒரு குடும்பமாக இதனை கடந்துவிட வேண்டும் என்று நினைத்தோம். கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. திருமணம் ஆன புதிதில் பெரியவர்கள் உடன் இருந்தால் சின்ன சின்ன விஷயங்களை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்று சொல்லித்தருவார்கள். பெரியவர்கள் கூட இருப்பது ரொம்பவே அவசியமான ஒன்று" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X