'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!

By

கொச்சி: பிரபல முன்னாள் ஹீரோயின்கள் சேர்ந்து கொண்ட த்ரோபேக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

தமிழில், விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் தோழியாக நடித்தவர் பூர்ணிமா.

மலையாள நடிகையான இவர், சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

இவர், நடிகர் பிருத்வி ராஜின் அண்ணன், இந்திரஜித்தை காதலித்து கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரார்த்தனா, நட்சத்திரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மலையாளத்தில் காட்டன் மேரி, நரனது தம்புரான், ரண்டாம் பாவம், டேனி, குலாபி டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் வைரஸ்

மீண்டும் வைரஸ்

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த இவர், ஆஷிக் அபு இயக்கிய வைரஸ் படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு வந்தார். அடுத்து நிவின் பாலியின் துறைமுகம் படத்திலும் நடித்த இவர். ஃபேஷன் டிசைனரும் கூட. இவர் இப்போது இந்தியில் அறிமுகமாகிறார்.

த்ரோபேக் போட்டோ

த்ரோபேக் போட்டோ

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் த்ரோபேக் போட்டோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், முன்னாள் ஹீரோயின்களான மஞ்சு வாரியர், கீது மோகன் தாஸ், சம்யுக்தா வர்மா ஆகியோர் உள்ளனர். இதற்கு கேப்ஷனாக, 'இது ஞாபகமிருக்கா, கேர்ள்ஸ்? இது நம்ம த்ரோபேக். 5 வருஷத்துக்கு முன்னால எடுத்த போட்டோ என்று குறிப்பிட்டுள்ளார்.

அழகான நினைவுகள்

அழகான நினைவுகள்

இதற்கு கருத்துத் தெரிவித்துள்ள நடிகை மஞ்சு வாரியர், அழகான நினைவுகள். இதை விரும்புகிறேன். இதே போல மீண்டும் ஒரு சந்திப்பு வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ், செம போட்டோ, நான்கு பேரும் நச்சுன்னு இருக்கீங்க என்று கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X