ஹேப்பி நியூஸ்.. பிரபல டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
சினிமாவை விட சின்னத்திரை தான் ரசிகர்களை மிகவும் கனெக்ட்டடாக வைத்திருக்கிறது.
சினிமா நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அதே அளவு அன்பும் பாசமும் சின்னத்திரை நடிகைகளுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

பூவே பூச்சூடவா
ஜீ தமிழ் சீரியலில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி தொடங்கிய பூவே பூச்சுடவா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 4 ஆண்டுகளை கடக்கப் போகிறது. கார்த்திக் வாசுதேவ், கிருத்திகா லட்டு, மதன் பாண்டியன், ரேஷ்மா முரளிதரன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

விரைவில் திருமணம்
பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மதன் பாண்டியன் மற்றும் ரேஷ்மா ஆகியோருக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது என்கிற அசத்தலான அப்டேட்டை சமீபத்தில் இருவரும் வெளியிட்டு உறுதி செய்தனர். பூவே பூச்சூடவா ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி வந்தனர்.

ஒரே விசேஷம் தான்
மேலும், அனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தனலட்சுமிக்கு கடந்த ஆண்டு அவருடைய காதலருடன் திருமணம் நடைபெற்றது. இப்படி இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கு ஒரே விசேஷமாக நடந்து வரும் நிலையில், இதே தொடரில் நடித்து வரும் மற்றொரு நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகைக்கு நிச்சயதார்த்தம்
இந்நிலையில், தற்போது பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி ஜெய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரை நடிகர்களான மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்தோஷத்தில் ரசிகர்கள்
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி ஜெய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சின்னத்திரை பிரபலங்களும், சக நடிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











