Big Boss Azeem - ஒரே பாத்ரூம்தான் யூஸ் செய்வோம்.. எனக்கும் அசீமுக்கும் சண்டை வரும்.. சீரியல் நடிகை ஓபன் டாக்
சென்னை: Big Boss Azeem (பிக்பாஸ் அசீம்) பூவே உனக்காக சீரியலில் நடித்தபோது தனக்கும் அசீமுக்கும் சண்டை வந்ததாக நடிகை ப்ரீத்தி தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் அசீம். பிரபல்யத்தைவிட விமர்சனத்தைத்தான் அதிகம் சந்தித்தார் அவர். சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசியது, ஷிவினை கிண்டல் செய்தது, விக்ரமனை டார்கெட் செய்தது என அந்த சீசனின் ஹாட் டாபிக்காக அசீம்தான் இருந்தார். வாரா வாரம் ஹவுஸ் மேட்ஸுடன் பேசும் கமல் அசீமுக்கு அட்வைஸ் செய்வதும் ரெகுலரானது. முக்கியமாக, உங்களது மகன் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் அட்வைஸ் செய்து பார்த்தார். இருப்பினும் பிக்பாஸ் முடியும்வரை அசீம் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

அசீம் வெற்றி: விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். விக்ரமன் இல்லை ஷிவின் இவர்கள் இருவரில் ஒருவர்தான் டைட்டிலை வெல்வார்கள் என மக்கள் எதிர்பார்க்க அசீம் டைட்டிலை வென்றார். விக்ரமனும், ஷிவினும் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
கமல் மீது தாக்குதல்?: டைட்டில் வின்னர் என்ற கௌரவத்தோடு வெளியே வந்த அசீம் பல சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்தார். அப்படி ஒரு பேட்டியில் பேசிய அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு். ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்க பல்லாயிரம் நாள்கள் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சியை பார்த்துதான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமே கிடையாது" என்றார். இதன் மூலம் அவர் கமல் ஹாசனைத்தான் மறைமுகமாக பேசுகிறார் என்று ரசிகர்கள் கூறினர்.
தைரியம் இருக்கா?: மேலும், தைரியம் இருந்திருந்தால் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும்போதே கமல் ஹாசனிடம் இப்படி பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் வந்த பிறகு இப்படி பேசுவது ஞாயமில்லை என கூறினர். இதனையடுத்து தான் கமல் ஹாசனை குறிப்பிட்டு அப்படி பேசவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே அவர் திரைப்படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்த மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ப்ரீத்தி பேட்டி: அசீம் பூவே உனக்காக என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். அவருடன் ப்ரீத்தியும் நடித்தார். பிறகு பாதியில் விலகினார். இந்நிலையில் ப்ரீத்தி அளித்த சமீபத்திய பேட்டியில், "பூவே உனக்காக சீரியலில் நடிக்கும்போது எனக்கு சம்பளமே ஒழுங்காக வராது. அதுமட்டுமின்றி செட்டில் தனித்தனி கழிவறைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே கழிவறைதான். அதனால் எனக்கு சிறுநீரக தொற்றும் ஏற்பட்டுவிட்டது.
அசீமுடன் சண்டை: பூவே உனக்காக சீரியலில் நடித்த பலருக்கும் இந்த பிரச்னை இருந்தது. அந்த சீரியலில் அசீமுடன் நடித்தபோது எங்களுக்குள் சண்டை வரும். ஆனால் பிறகு பேசி சரி செய்துகொள்வோம். அசீம் எனக்கு நண்பரும் இல்லை எதிரியும் இல்லை. என்னுடைய சக நடிகர் மட்டும்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











