பூவே உனக்காக நாயகி சங்கீதா ரீ- என்ட்ரி
விஜய் உடன் பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாளப்படம் ஒன்றின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
விஜயகாந்துடன் 'அலெக்சாண்டர்', ராஜ்கிரணுடன் 'எல்லாமே என் ராசா தான்' விஜய்யுடன் 'பூவே உனக்காக' உட்பட பல தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் சங்கீதா.
பிசியாக நடிக்கும் போதே ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

மீண்டும் மலையாள சினிமாவில்
சங்கீதாவுக்கு திருமணமாகி ஒரு சில ஆண்டுகளான நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாக இருக்கிறார். ஆனால் தமிழில் இல்லை; மலையாளத்தில்!

தேசிய விருது பெற்ற சங்கீதா
கடந்த 1998-ஆம் ஆண்டில் மலையாள நடிகர் சீனிவாசனும், சங்கீதாவும் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா'.
இந்தப் படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்ததோடு, சங்கீதாவுக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

தங்கர் பச்சான்
இந்த படம் தான் தமிழில் தங்கர்பச்சான் இயக்கி நடித்த ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'. ஆனால் சரியான சொதப்பலாகிவிட்டது தங்கர்பச்சானுக்கு.

15 ஆண்டுகளுக்குப் பின்
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா' படத்தில் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்த சங்கீதா, இப்போது அதே ஸ்ரீனிவாசனுடன் மீண்டும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

சமூக கருத்துப் படம்
அந்தப் படத்திற்கு பெயர் ‘நகரவாரிதி நடுவில் ஞான்'. இந்தப் படம் அனைவருக்குமான நல்ல ஒரு சமூக கருத்தை கூறும் படமாக உருவாக இருக்கிறதாம்! இந்தப் படத்திற்கும் விருது கிடைக்குமா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











