பூவே உனக்காக அஞ்சு அரவிந்தை ஞாபகமிருக்கா.. 2வது கணவரோட இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடிகை அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார். தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்த மலையாள நடிகை முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அஞ்சு அரவிந்தை பார்த்த ரசிகர்கள் ஆளே மாறிவிட்டாரே என வாயடைத்து போயுள்ளனர்.

அஞ்சு அரவிந்த்

அஞ்சு அரவிந்த்

1995ம் ஆண்டு சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான அக்‌ஷரம் படத்தில் நாட்டியப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சு அரவிந்த். பார்வதி பரிநாயம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து வந்த அஞ்சு அரவிந்த் 1996ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் பூவே உனக்காக படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

பூவே உனக்காக திரைப்படம் தான் நடிகர் விஜய்க்கு முதன் முதலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த படத்தில் விஜய் நடிகை அஞ்சு அரவிந்தை தான் ஒரு தலையாக காதலித்து இருப்பார். ஆனால், இன்னொருவரை தனது காதலி காதலிக்கிறார் என்பதை அறிந்த விஜய் தனது காதலியின் காதலுக்கு குடும்பத்தினரால் ஏற்பட்டுள்ள சிக்கலை களைய போராடுவதே அந்த படத்தின் கதையாக இருக்கும்.

ஒரு முறை பூ உதிர்ந்து விட்டால்

ஒரு முறை பூ உதிர்ந்து விட்டால்

செடியில பூக்குற பூ ஒரு முறை உதிர்ந்து விட்டால் மீண்டும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது என கிளைமேக்ஸில் விஜய் பேசிவிட்டு முதல் காதலின் நினைவுகளோடு கடந்து செல்லும் காட்சி ரசிகர்களை கண்கலங்க வைத்தது. அந்த காட்சியையே சமீபத்தில் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யே ட்ரோல் செய்யும் அளவுக்கு வசனம் பேசி நடித்திருப்பார். முதல் காதலை மறக்கக் கூடாது என்பதை பல இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்ததே பூவே உனக்காக படமாகத்தான் இருக்கும் என்றால் அது மிகையாகாது. கடைசி வரை விஜய் தான் தன்னை காதலித்தார் என்றே தெரியாமல் அஞ்சு அரவிந்த் அவரிடமே வந்து கிளைமேக்ஸில் பேசும் காட்சிகள் எல்லாம் வேற ரகம்.

அருணாச்சலம்

அருணாச்சலம்

பூவே உனக்காக படத்திற்கு பிறகு எனக்கொரு மகன் பிறப்பான், ரஜினிகாந்தின் அருணாச்சலம், மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒன்ஸ்மோர் உள்ளிட்ட படங்களில் அஞ்சு அரவிந்த் நடித்திருந்தார். மேலும், உன்னருகே நானிருந்தால், வானத்தைப் போல, வாஞ்சிநாதன் என பல படங்களில் நடித்த அவர், அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் முழுமையாக மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

திருமண நாளிலேயே விவாகரத்து

திருமண நாளிலேயே விவாகரத்து

கடந்த 2002ம் ஆண்டு தனது மாமா தேவராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அஞ்சு அரவிந்த் சுமார் 2 ஆண்டுகளிலேயே தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து திருமணம் நடந்த நாளிலேயே அவர் விவாகரத்து செய்துக் கொண்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

சினிமா படங்களில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த நிலையில், மலையாள தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த அஞ்சு அரவிந்த் 2006ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகான ஒரு மகள் உள்ளார்.

குடும்பத்துடன் செம ஹேப்பி

குடும்பத்துடன் செம ஹேப்பி

இந்நிலையில், சமீபத்தில் தனது ஒட்டுமொத்த குடும்ப உறவுகளுடன் செம ஹேப்பியாக எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் அஞ்சு அரவிந்த். அவரை அடையாளம் கண்டு கொண்ட விஜய் ரசிகர்கள் நம்ம பூவே உனக்காக நடிகையா இது என வாயடைத்துப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X