விஜய் இப்போது பிரம்மாண்டமாக தெரிகிறார்.. பூவே உனக்காக சங்கீதா பேட்டி!

சென்னை : விஜய்யின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமானத் திரைப்படம் பூவே உனக்காக. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பின்பே விஜய்யின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கீதா, இயக்குநர் சரவணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி தற்போது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சங்கீதா, விஜய்யை இப்போ பார்க்கும் போது ரொம்ப பிரம்மாண்டமாக தெரிவதாக கூறியுள்ளார்.

பூவே உனக்காக

பூவே உனக்காக

1996ம் ஆண்டு விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் பற்றி இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும். இப்படத்தில் வரும் சொல்லாமலே.. யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது என்ற பாடலை இளசுகள் நிச்சயம் முனுமுனுத்து இருப்பார்கள்.

ஒரே ஒரு காதல் தான்

ஒரே ஒரு காதல் தான்

இது மட்டும் இல்லாமல் ஒரு செடியில ஒரு பூ பூதான் பூக்கும்... மனசுக்குள்ள ஒரே ஒரு காதல் தான் வரும் என்று கிளைமாக்ஸில் விஜய் பேசிய வசனம் பலருக்கும் பிடித்துப்போக. திரையரங்குக்கு கூட்டம் கூட்டமாக வந்து படத்தைப் பார்த்தனர். இயக்குநர் விக்ரம் இப்படத்தில் காதலை வேறுவிதமாக சொல்லி இருந்ததால், இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டியது.

பிரம்மாண்டமாக இருக்கிறார்

பிரம்மாண்டமாக இருக்கிறார்

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா, விஜய்யை புகழ்ந்து பாராட்டி பேட்டி அளித்துள்ளார். அதில், பூவே உனக்காக படத்தில் பார்த்த விஜய்க்கும், இப்போ விஜய்யை பார்ப்பதற்கும் மிகவும் பிரம்மாண்டமாகவே தெரிகிறார். விஜய் செட்டில் அமைதியாகவே இருப்பார் அதிகம் பேச மாட்டார் என்றார்.

Recommended Video

Sangeetha Sringeri | Oh My Kadavule கன்னட REMAKE ல நடிக்கிறேன் | #Interview
கதை பிடித்திருந்தால் நடிப்பேன்

கதை பிடித்திருந்தால் நடிப்பேன்

படத்தில் ஒரு பாட்டு வருதுனா, பொதுவா அனைவரும் ஹீரோயினைத்தான் பார்ப்பார்கள். ஆனால், விஜய் சார் படத்தின் பாடல் என்றால், ஹீரோயின் யாருவேனா இருக்கட்டும் அனைவரும் விஜய்யைத்தான் பார்ப்பார்கள் இதுதான் அவரின் ஸ்பெஷல். விஜய்யின் வளர்ச்சி பிரம்மாண்டமா இருக்கு, இதற்காக அவர் தன்னைத்தானே தயார் படுத்திக்கொண்டார் என்றார். திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. கதை எனக்கு பிடித்திருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று நடிகை சங்கீதா பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X