For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லண்டன் முதல் அசுரன் முருகன் வரை அசித்தி வரும் இளைஞர்களின் இதயதுடிப்பு 'டீஜே'

  |
  Playback singer Tee Jay | மீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே..!

  சென்னை : டீஜே லண்டனில் வசித்து வரும் இந்திய குடும்பத்தை சேர்ந்த இளைஞன் இசையின் மீது ஆர்வம் கொண்டு ஆல்பம் பாடல்கள் என தனது கனவுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் . அந்த இடத்தில் இருந்து பல ஏற்ற இறக்கங்களை பார்த்த பின்பு 'முட்டு முட்டு' என்கிற பாடல் நல்ல பெயரை பெறுகிறது. அந்த நேரம் இணைய சேவயை மக்கள் அதிகபடியாய் பயன்படுத்த ஆரம்பித்த தருணமும் கூட எல்லா இளைஞர்களின் கணினியிலும் அந்த பாடல் இல்லாமல் இருக்காது. பலரின் ரிங்டோனே இந்த பாடல் தான் . ஏன் நடிகர் சிம்புவே இந்த பாடலை கேட்டு பாராட்டி இருந்தார் . 'முட்டு முட்டு ' பாடல் அவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது . அப்போதிலிருந்து இப்போது வரை டீஜேவை தெரியாத இளைஞர்கள் கிடையாது . இளைஞர்கள் மத்தியில் டீஜேவின் பாடல்கள் மிக பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.

  டீஜே இப்படி முட்டு முட்டு பாடலின் மூலம் பிரபலமாகிய பின் பல பாடல்கள் பாடி ஆல்பமாக தயாரித்து இருக்கிறார் . அதில் முக்கியமாக தேன் குடிக்க,ஆசை,பொம்மை, அட்டேன்சன் மற்றும் குரு குரு போன்ற ஆல்பங்களை தயாரித்துள்ளார். அதில் குரு குரு என்ற பாடலை முதலில் டீஜே ,ஒரு மேடையில் சில வரிகளை மட்டும் பாடி இருந்தார் அதற்கு பிறகு, அதை ஆல்பமாக தயாரித்து இருந்தார் .

   Pop singer has now turned to be sucessful actor

  டீஜேக்கு பல தமிழ் படங்களிலும் பாடும் வாய்ப்பு கிடைத்தது . இமைக்கா நொடிகள், பியார் பிரேமா காதல் ,இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.

   Pop singer has now turned to be sucessful actor

  தற்போது கூட அசுரன் படத்தில் முருகன் என்ற கதாபாத்திர்த்தில் நடித்திருந்தார். அதில் அந்த கதாபாத்திரம் பெண் பாரக்க செல்லும் இடத்திலும் இவரது குரலில் ஒரு சிறிய பாடல் வரும் . அசுரன் படம் தான் டீஜேவுக்கு முதலில் ரிலீஸாகி இருக்கும் படம் . டீஜே அசுரன் படத்திற்கு முன்பே 'அம்சனா' எனும் தமிழ் படத்தில் நடித்து விட்டு 'தட்ரோம் தூக்ரோம்' படத்தில் நடித்து விட்டார் .ஆனால் அந்த படம் இனிமேல் தான் ரிலீஸாக உள்ளது. படத்தின் முன்னோட்டம் யூடியூபில் ஏப்ரல் மாதமே வெளியிட பட்டு விட்டது .மேலும் 'அம்சனா' படமும் இன்னும் ரிலீஸாக வில்லை.

  தற்போது டீஜே மனசார சொல்லு எனும் ஆல்பத்தை நடிகை நந்திதாவுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார் .அந்த ஆல்பத்தின் பாடல் இணையத்தில் வெளியிட பட்டுள்ளது . அந்த பாட்டு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸாடாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் டீஜே.

   Pop singer has now turned to be sucessful actor

  இதற்கு பின் டீஜே நடிகை மற்றும் பாடகர் ஆன்டீரியாவுடன் இணைந்து ஒரு ஆல்பத்தை தயாரித்து வருகிறார் . அந்த ஆல்பம் அடுத்து ரிலீஸாகும் என தெரிகிறது. இதன் புரமோ முன்பே ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது டீஜேவுக்கு அசுரன் பட வாய்ப்பும் இந்த ஆல்பம் மூலம் தான் கிடைத்தது. ஆன்டீரியா மூலம் தான் வெற்றி மாறன் டீஜேவை தொடர்ப்பு கொண்டு அசுரன் படத்தில் நடிக்க வைத்தாராம். இதை டீஜே ஒரு பேட்டியின் போது கூறினார்.

  முனிஷ்காந்த் தான் பூதமா.. வைபவ்வின் ஆலம்பனா மேஜிக் செய்யுமா?

  ஆகவே டீஜே இப்போது ஒரு பிஸியான பாடகராக மட்டுமல்ல நடிகராகவும் முன்னேறிவிட்டார். இனிமேல் அவருக்கு படங்கள் குவிய போகிறது என்பது உறுதி.

  English summary
  Teeje coming Indian based family due to his craze in singing has sung many pop alnbumns. He became very popular through his 'muttu muttu ' albumn. This singer has got an oppurtunity to act in films. Sucha an oppurtunity is playing murugan character in super hit film "Asuran". He has also acted in few films like 'Thatrom Thukrom' and "Amsana" which whihc is yet to be released. This great oppurtunity has got into Teeja's hands with the support of Actress and Singer Andrea.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X