நிறைமாத கர்ப்பம்.. மூன்றாவது திருமணத்திற்கு ரெடியான பாப் பாடகி ரிஹானா!

சென்னை : அமெரிக்க பாப் பாடகியான ரிஹானா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி உள்ளார்.

பாப் பாடகியான ராபின் ரிஹானா ஃபென்டி 1988ம் ஆண்டு பிப்ரவரி 20ந் தேதி பார்படாஷில் பிறந்தார்.

பாப் பாடகி, பாடல் ஆசிரியர், நடிகை, பேஷன் டிசைனர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் ரிஹானா.

பாப் பாடகி ரிஹானா

பாப் பாடகி ரிஹானா

பாப் பாடகியான ரிஹானா Good Girl Gone Bad,Rated R, Loud, Talk That Talk, Unapologetic,Umbrella, Rude Boy, Only Girl போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் உலகப் புகழ் பெற்றார். "Umbrella" என்ற ஆல்பம் ரிஹானாவுக்கு முதல் கிராமி விருதைப் பெற்றுத் தந்தது மற்றும் உலகளாவிய நட்சத்திரமாக அவரை உயர்த்தியது.

பல விருதுகளை பெற்றார்

பல விருதுகளை பெற்றார்

2005ம் ஆண்டு சூரியனின் பாடல் என்கிற ஆல்பத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைய தொடங்கிய ரிஹானா 250 மில்லியன் இசை தட்டுகள் விற்பனை என்கிற உலக சாதனையை படைத்தார். 9 கிராமிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு இசை விருதுகளையும் இவர் குவித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி

நிறைமாத கர்ப்பிணி

2016ம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளாக இசை ஆல்பம் எதையும் வெளியிடாமல் இசை துறையில் இருந்து ஒதுங்கியே இருந்த ரிஹானா, கடந்த மாதம் அமெரிக்காவின் க்ளெண்டேல் நகரில் நடைபெற்ற சூப்பர் பவுல் 57 நிகழ்ச்சியில் நிறைமாத கர்ப்பிணியாக பழைய கிளாசிக் ஹிட் பாடல்களை பாடியும், ஆடியும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

மேற்கத்திய பாடகி ரிஹானா, தனது காதலரான ராக்கியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராக்கியுடன் 2020ம் ஆண்டில் இருந்து லிவ்விங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்த இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இவர் கிறிஸ் பிரவுன் என்பரை 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரிஹானா அவரை 2013ம் ஆண்டு பிரிந்தார். பின் ஹசன் ஜமீலுடன் 2017 முதல் வாழ்ந்து வந்த இவர் அவரையும் விவாகரத்து செய்தார். பாப் பாடகி புதிய ஆல்பத்தை வெளியிடுவார் என அவரது தீவிர ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X