Selena Gomz Benny Blanco: செலினா கோம்ஸ்க்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா? இது எப்போ நடந்துச்சு

அமெரிக்கா: செலினா கோம்ஸ் உலகம் முழுவதும் அறியப்படும் மிகவும் பிரபலமான பாப் பாடகி. இவரது பாப் பாடல்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் எனக் கூறும் அளவிற்கு இவரது பாப் பாடல்கள் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட ரசிகர்கள் உள்ளனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 423 மில்லினுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகின்றார்கள். இவர் இப்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

செலினா கோம்ஸ், இந்தப் பெயரைத் தெரியாத, அல்லது அவர் குறித்து கொஞ்சம் கூட தெரியாத டீன் ஏஜ் இளைஞர்கள் மிகக் குறைவு. 32வயதான செலினா கோம்ஸ் தனது அசாத்திய பாடல் எழுதும் திறமையாலும் , பாடல் பாடும் திறமையாலும் புகழின் உச்சத்தினை எட்டியுள்ளார் என்றுதான் கூறவேண்டும். இவரது பாப் பாடல் கச்சேரி நடக்கின்றது என்றாலே, பல நாடுகள் கடந்து வரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. செலினா கோம்ஸ் பாப் பாடகர் மட்டும் இல்லாமல் டீவி சீரிஸில் நடிக்கவும் செய்கின்றார். க்யூட்டான அதேநேரத்தில் அசாத்திய இவரது நடிப்புத் திறன் ரசிகர்களை நொடிப்பொழுதில் ஈர்த்து விடுகின்றது.

pop singer selena gomez selena gomez engaged benny blanco

செலினா கோம்ஸ் தற்போது நிச்சயம் செய்துகொண்டு இருப்பவர், அவரது காதலர் பென்னி பிளாங்கோவைத்தான். இவர்கள் இருவரும் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து டேட்டிங் செய்து வருகின்றனர். இவர்கள் இருவருமே தொடக்கத்தில் தங்களது டேட்டிங்கினை மறைமுகமாகவே வைத்திருந்தனர். ஆனால், ஒரு ஆறு மாதத்திற்குப் பின்னர் பகிரங்கமாக அறிவித்தனர். அதன் பின்னர் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தனர். இது ரசிகர்களில் ஒரு சாராருக்கு அதிர்ச்சியும், ஒரு சாராருக்கு மகிழ்ச்சியும் அளித்தது.

pop singer selena gomez selena gomez engaged benny blanco

டேட்டிங்: இதுமட்டும் இல்லாமல், தங்களது காதலை பகிரங்கமாக அறிவித்த பின்னர், கோல்டன் க்ளோப் விருது நிகழ்ச்சி, எம்மி அவார்ட்ஸ் போன்ற விருது விழாக்களில் ஒன்றாகத் தோன்றினர். இதுமட்டும் இல்லாமல், அடிக்கடி அவுட்டிங், டேட்டிங் என இவர்களின் காதல் டாப் கியரில் சென்றுகொண்டு இருந்தது. இவர்கள் டேட்டிங்கின்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டாலும், பலரது மனம் அதனால் காயப்பட்டதுண்டு என்று கூறினால் அது மிகையல்ல.

pop singer selena gomez selena gomez engaged benny blanco

நிச்சயதார்த்தம்: இப்படியான நிலையில்தான் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதை செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது இந்தப் பதிவு தற்போது உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

pop singer selena gomez selena gomez engaged benny blanco

இன்ஸ்டா: செலினா கோம்ஸ் இதுவரை தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு ஆயிரத்து 32 போஸ்டுகளைப் போட்டுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 423 மில்லியனுக்கும் அதிகமானோர், அதாவது, 42 கோடியே 30 லட்சத்துக்கு அதிகமானோர் பின் தொடருகின்றனர். உலகில் இன்ஸ்டாகிராமில் அதிக பாளோவர்ஸ்களைக் கொண்டுள்ள பிரபலங்களில் இவரும் ஒருவர். இவரைக் கரம்பிடிக்கப்போகும் பென்னி பிளாங்கோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

pop singer selena gomez selena gomez engaged benny blanco

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X