24 வயது காதலி ஷீத்தலை பிரிந்தாரா பப்லு.. இருவரும் சேர்ந்து இருந்த போட்டோ மொத்தமும் டெலிட்!
சென்னை: 24 வயது காதலியை நடிகர் பிரித்விராஜ் பிரிந்து விட்டாரா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டுள்ளனர்.
தமிழ் சினிமா குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பப்லு பிரித்விராஜ்: சீரியலில் பிஸியாக நடித்து வரும் பப்லு பிரித்விராஜ், கடந்த ஆண்டு 24 வயது இளம் பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள், பப்லுவை கண்டபடி விளாசினார்கள்.
கடும் விமர்சனம்: 54 வயதில் 24 வயது பெண் கேட்குதா என்றும், இந்த வயசில் பொம்பள சோக்கு கேக்குதா என்றும் பப்லுவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு எல்லாம் கொஞ்சமும் அசராத பப்லு, என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன், உடம்பை எப்படி பிட்டாக வைத்து இருக்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது என்று தடாலடி பதில் அளித்து இருந்தார்.
காதலி ஷீத்தலுடன்: இதையடுத்து, இருவரும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக பாடுவதும் ஆடுவதுமாக இருந்தனர். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவிய நிலையில், இது உண்மை இல்லை என்றார். இருந்த போதும், பப்லு தனது மலேசிய காதலி ஷீத்தலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
பிரிந்து விட்டார்களா? இந்நிலையில், பப்லு பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த, வீடியோவில் பப்லுவின் காதலி ஷீத்தல் இல்லை. அது மட்டுமில்லாமல் ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பப்லுவுடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ காட்சி அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளது.
இதனை கூர்ந்து கவனித்த இணையவாசிகள், இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கமெண்ட்டில் கேட்க, அதற்கு ஷீத்தல் அந்த கம்மெண்ட்டை லைக் செய்துள்ளார். ஆகையால் அவர்கள் இருவரும் பிரிந்தது உண்மை தான் என்ற முடிவுக்கு தற்போது இணையவாசிகள் வந்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











