விஷால் பட நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டு... அதெல்லாமே பொய் என்று மறுத்த நடிகர்!

சென்னை: விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட் பிரபல நடிகர் நானா படேகருடன் சேர்ந்து நடித்த போது, அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி இருந்தார். இதை தொடர்ந்த மறுத்துவந்த நானா படேகர் தற்போதும் அந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார்

பிரபல நடிகையான தனுஸ்ரீ தத்தா இந்தியில், ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த இவர்,

Nana Patekar Tanushree Dutta metoo

நடிகை தனுஸ்ரீ தத்தா: 2008 ஆம் ஆண்டில், 'ஹார்ன் ஓகே பிளீஸ்' படத்தின் ஒரு பாடல் படப்பிடிப்பின் போது, நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக நானா படேகர் மீது மீடூ புகார் கூறியிருந்தார். இதற்கு போதிய ஆதாரம் இல்லாததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

அவர்கள் தான் காரணம்: இதுகுறித்து பேசிய நடிகை தனுஸ்ரீ, எனக்கு ஏதேனும் நேர்ந்தால், #metoo குற்றம் சாட்டப்பட்ட நானா படேகர், அவரது வழக்கறிஞர்கள், அவரது கூட்டாளிகள் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள் தான் காரணம். பாலிவுட் மாஃபியா யார்? எஸ்.எஸ்.ஆர் அதாவது சுஷாந்த் சிங் மரண வழக்கில் அனைவரின் பெயர்களும் அடிக்கடி வந்த அதே நபர்கள்தான். அவர்கள் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள். அவர்களின் வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் நரகமாகும். சட்டமும் நீதியும் என்னைத் தவறவிட்டிருக்கலாம் ஆனால் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார்.

நடிகர் நானா படேகர்: நடிகை கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த நடிகர் நானா படேகர், தற்போது, தி லாலன்டாப் உடனான பேட்டியில், மீண்டும் அந்த பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். ஆரம்பத்தில் இருந்தே இது பொய்யான குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியும் , அதனால்தான் நான் ஒருபோதும் இந்த விஷயம் குறித்து கோபப்படவில்லை. எல்லாமே பொய்யாக இருக்கும்போது, நான் ஏன் கோபப்பட வேண்டும், அந்த விஷயம் எல்லாம் பழைய விஷயம், அவை நடந்திருந்தால் அதுபற்றி பேசலாம். அவர்களைப் பற்றி நான் என்ன பேச முடியும்? அப்படி எதுவும் நடக்காத அந்த நேரத்தில் நான் என்ன சொல்ல முடியும்?

எல்லாமே பொய்: அனைவருக்கும் தெரியும்: படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று அங்கிருந்த அனைவருக்குமே தெரியும், திடீரென்று, நீங்கள் இதைச் செய்தீர்கள், நீங்கள் அதைச் செய்தீர்கள் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அதற்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது, அதற்கு பதில் சொல்லுவது என் வேலையும் இல்லை. இந்த குற்றத்தை நான் செய்யவில்லை என்று சொல்லியிருக்க வேண்டுமா? நான் எதுவுமே செய்யவில்லை என்ற உண்மை எனக்குத் தெரியும், அனைவருக்கும் தெரியும் போது நான் செய்யவில்லை என்று ஏன் சொல்லவேண்டும் என நானா படேகர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X